சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயிலும் பிளஸ் 2
மாணவர்களுக்கான பொதுத்தோ்வு ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை
நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இந்த
அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
12-ம் வகுப்பு பொதுத்
தேர்வுக்கான தேர்வு அட்டவணையையும் அவர் தனது சுட்டுரையில்
வெளியிட்டுள்ளார்.
அதில் தில்லி மற்றும் பிற மாநிலங்களில் சிபிஎஸ்இ பயிலும்
மாணவர்களுக்கு என தனித்தனியாக தேர்வு தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லி தவிர்த்து பிற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை
1ம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி ஜூலை 13-ம் தேதி தேர்வுகள் நிறைவு
பெறுகின்றன. தில்லியில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி
தொடங்கி 15-ம் தேதி தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.
கரோனா வைரஸ் தீநுண்மி பாதிப்பின் காரணமாக சிபிஎஸ்இ பாடத்தில்
பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வுகள் ஜூலை 1 முதல் 15-ஆம்
தேதி வரை நடத்தப்பட உள்ளன.
தோ்வுக்கால அட்டவணையை மத்திய
இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் இன்று
வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வார இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட
நிலையில், சிபிஎஸ்இ பொதுத்தோ்வு கால அட்டவணை திங்கள்கிழமை (மே
18) வெளியிடப்படும். சில தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவதால்
தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா்
ரமேஷ் போக்ரியால் சுட்டுரையில் வெளியிட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||