நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் திருத்த சட்ட மசோதா கடந்த 2017-2018ம் ஆண்டு கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் மருத்துவ கல்வி மற்றும் அதன் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று சொல்லப்பட்டாலும் நீட் தேர்வுக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இந்த தேர்வை இதுவரை சிபிஎஸ்இ நிர்வாகம்தான் நடத்தி வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் ேதசிய தேர்வுகள் முகமை என்ற அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு நீட் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் நீட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் தாக்கல் செய்யும் தேதி முடிவடைந்த நிலையில் வரும் 3ம் தேதி நீட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி சார்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீட் தேர்வு முறை சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினித் சரண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் நீட்தேர்வு என்பது, சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் கண்டிப்பாக கிடையாது, மேலும் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (இதர) விதிக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு சமமான ஒன்றாகும். இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. அதனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் விலக்களிக்க முடியாது. தேச நலனை மேம்படுத்துவதிலும் கல்வி தரமுடன்இருக்க வேண்டும் என்பதிலும் எந்த சமரசமும் இருக்க கூடாது என்பதில் நீதிமன்றம் தெளிவாக உள்ளது.
மேலும் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் நிலவும் முறைகேடுகளை தடுக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் அரசு உதவி பெறாத, அரசு உதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் ஆகியவைகளின் உரிமைகளை எந்த வகையிலும் நீட் தேர்வு பறிக்காது என தெரிவித்த நீதிபதிகள் அது தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||