கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்தும் முதல் நடவடிக்கையாக கடந்த மாதம் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், பல்வேறு மாநிலங்களில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) இந்த ஆண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ கூறியிருந்தது.
இதனிடையே, கல்லூரிகளுக்கான புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை தயாரிக்க பல்கலை மானியக் குழுவால் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது அடுத்த கல்வியாண்டை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என்றும் கல்லூரியில் புதிதாக சேருபவர்களுக்கான கல்வியாண்டை செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கலாம் என்று ஆலோசனை வழங்கி உள்ளது. ஆனால் இது குறித்த இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என சிபிஎஸ்இ தெளிவுபடுத்தி உள்ளது. இது தொடர்பாக சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடிந்து நிலைமை சீரான பின்னர் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 29 பாடங்களுக்குமான தேர்வுகள் முறையாக நடத்தப்பட உள்ளது.
மாணவர்களுக்கு போதிய அவகாசம் அளிக்கும் வகையில், தேர்வுகள் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படும். வினாத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள தயாராக இருக்கும்படி அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அட்டவணையில் இடம் பெற்றுள்ள 29 பாடங்கள் தவிர, பிற துணைப் பாடங்களுக்கான வினாத்தாள் திருத்தும் பணி குறித்தும் சிபிஎஸ்இ அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வு நடத்தப்படாத பாடங்களுக்கு உள்மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்று டெல்லி துணை முதல்வரும் அம்மாநில கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா அறிவுறுத்தி உள்ளார். அதே நேரம், பொறியியல் கல்லூரிக்கான ஜேஇஇ, மருத்துவ கல்லூரி படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||