மாநில அமைச்சர்கள், உயர் அதி காரிகளின் ஊதியத்தில் 50 சதவீத ஊதியத்தைப் பிடித்தம் செய்ய மேகாலய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் ஊதியம், அடுத்தடுத்த மாதங்களில் விடுவிக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலர் எம்.எஸ்.ராவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கரோனா பாதிப்பால் ஏற்பட் டிருக்கும் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அமைச்சர்கள், ஐஏ எஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதி காரிகளின் ஊதியத்தில் 50 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.
மேலும், அயல் பணியில் வந்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளின் ஊதி யத்திலும் இந்தப் பிடித்தம் செய்யப்படும். பிடித்தம் செய்யப்பட்ட ஏப்ரல் மாத ஊதியத்தின் பாக்கியை மேமாதத்திலும், மே மாத ஊதிய பாக்கியை ஜூன் மாதத்தி லும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அனைத்துத் துறை குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகளின் ஊதியத்தில் 35 சதவீதமும், குரூப்-சி அதிகாரிகளின் ஊதியத்தில் 25 சதவீதமும் பிடித்தம் செய்யப்பட்டு, தாமதமாக வழங்கப்படும்.
அதே நேரம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மாநில உள்துறை குரூப்-சி ஊழியர்கள், நக ராட்சி வாரியங்களில்பணிபுரியும் குரூப்-சி ஊழியர்கள், அனைத் துத் துறை குரூப்-டி ஊழியர்க ளின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய தாரர்களின் ஓய்வூதியத்தில் பிடித்தம் எதுவும் இருக்காது என தலைமைச்செயலர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||