கரொனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 31 வரை (நிறுவனம் அனுமதித்தால்) தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், அனைத்து மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அமைச்சர் கூறியதாவது, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற ஏப்ரல் 30ம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், இந்த அனுமதி ஜூலை 30 வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், தகவல் தொழில்நுட்பம் என்றில்லாமல், அனைத்து மாநில அரசுகளும், இணையம் வழியாக பல்வேறு அரசுப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று காரணமாக, பல்வேறு பணிகளின் பாணியே மாறிவிட்டது.
சுமார் 80% தொழில்கள் வீட்டில் இருந்தே செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது. எனவே, மக்களின் வசதிக்காக, பாரத் நெட் மூலம் இணையச் சேவையை பலப்படுத்துவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும் அவர் தெரவித்தார்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||