பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம்
1.1 இனப்பெருக்க முறைகள்
1.2 பாலிலி இனப்பெருக்கம்
1.3 பாலினப்பெருக்கம்
கற்றலின் நோக்கங்கள்
கற்றலின் நோக்கங்கள்
- உயிரிகளின் பாலிலி இனப்பெருக்க முறைகளைக் கற்றல்
- பாலிலி இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தை புரிந்துணர்தல்
- பல்வேறு பாலினப்பெருக்க முறைகளை அறிந்து கொள்ளுதல்
- பல்வேறு பாலினப்பெருக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்களையும், பரிணாமத்தில் அதன் பங்கினையும் உணர்தல்.
- பாரமீசியம் பால் மற்றும் பாலிலி எனும் இருவகை இனப்பெருக்கத் திறனையும் பெற்றுள்ளது.
- பாலிலி இனப்பெருக்கம் - புரோட்டிஸ்டா, பாக்டீரியா, ஆர்க்கியா.
- ஒற்றை பெற்றோர் மரபுப் பண்பு - பாலிலி இனப்பெருக்கம்.
- சைட்டோபிளாசம் பிரிதல் - சைட்டோகைனேசிஸ் Cytokinesis.
- உட்கரு பிரிதல் - கேரியோகைனேசிஸ் Karyokinesis.
- எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை - எ.கா அமீபா.
- கிடைமட்ட இருசமபிளவுமுறை - எ.கா பாரமீசியம் மற்றும் பிளனேரியா.
- நீள்மட்ட இருசமபிளவு முறை - எ.கா வோர்டிசெல்லா மற்றும் யூக்ளினா.
- சாய்வுமட்ட இரு சமபிளவு முறை - எ.கா டைனோஃபிளாஜெல்லேட்டுகள், செராஷியம்.
- பல பிளவு முறை - எ.கா: வோர்டிசெல்லா.
- பிளாஸ்மோடியத்தில் சைஷாண்ட் நிலையில் பல பிளவு முறை - சைஷோகனி.
- பிளாஸ்மோடியத்தில் ஊசைட் நிலையில் நடைபெறும் பல பிளவு முறை ஸ்போரோகனி.
- இராட்சத அமீபா - பிலோமிக்ஸா
- உறையாக்கம் காணப்படுவது அமீபா
- ஸ்ட்ரோபிலா ஆக்கம் காணப்படுவது ஆரிலியா
- பிளாஸ்மோடோமி - எ.கா. ஒபாலினா மற்றும் பிலோமிக்ஸா
- முகிழ்த்தல் (Budding) முறை - எ.கா கடற் பஞ்சு, ஹைட்ரா
- புற முகிழ்த்தல் (Exogenous budding) - எ.கா. ஹைட்ரா.
- அக முகிழ்த்தல் (Endogenous budding) - எ.கா. நாக்டிலூகா
- ஜெம்யூல்கள் - எ.கா. கடற் பஞ்சு, நன்னீர் பஞ்சு
- துண்டாதல் - எ.கா. கடல் சாமந்தி
- அபோலைசிஸ்” (தற்சிதைவு) - எ.கா. நாடாப்புழு (டீனியா சோலியம்)
- 1740ல் ஆபிரகாம் டிரம்ப்ளி என்னும் அறிவியலாளர் ஹைட்ராவில் ‘இழப்பு மீட்டல்’ குறித்து முதன் முதலில் ஆய்வு மேற்கொண்டார்.
- இழப்பு மீட்டல் - எ.கா. ஹைட்ரா மற்றும் பிளனேரியா.நட்சத்திர மீன் மற்றும் சுவர்ப்பல்லி இழந்த வால்
- முழு உருவ மீட்பு’(Morphallaxis) எ.கா. ஹைட்ரா, பிளனேரியா,
- உறுப்பு மீட்பு’(Epimorphosis) எ.கா. நட்சத்திர மீன் மற்றும் சுவர்ப்பல்லி இழந்த வால்
- மீண்டும் உருவாக்குதல் (Restorative) வகை இழப்பு மீட்டல். எ.கா. நட்சத்திர மீன் மற்றும் சுவர்ப்பல்லி இழந்த வால்
- பாலினப்பெருக்கம் - மரபியல் வேறுபாடுகள்
- பாலினப்பெருக்கம் - ஒருங்கிணைவு’ (Syngamy) மற்றும் இணைவு முறை இனப்பெருக்கம்
- வெளிக்கருவுறுதல் எ.கா: கடற்பஞ்சுகள், மீன்கள் மற்றும் இருவாழ்விகள்.
- உட்கருவுறுதல் எ.கா: ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள்.
- தன் கருவுறுதல்’ (Autogamy) எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
- அயல் கருவுறுதல்’ (exogamy) எ.கா: மனிதன்
- முழுசேர்க்கை’ (Hologamy) எ.கா டிரைக்கோநிம்ஃபா (Trichonympha).
- ஒத்த செல் சேர்க்கை (Isogamy) எ.கா. மோனோசிஸ்டிஸ்.
- வேறுபட்ட செல் சேர்க்கை (anisogamy) எ.கா. உயர்நிலை முதுகெலும்பற்றவை மற்றும் அனைத்து முதுகெலும்பிகள்.
- இணைவு முறை இனப்பெருக்கம் எ.கா: பாரமீசியம், வோர்ட்டிசெல்லா மற்றும் பாக்டீரியா (புரோகேரியோட்டுகள்).
- பருவ கால இனச்சேர்க்கையாளர்கள் - எ.கா: தவளைகள், பல்லிகள், பெரும்பாலான பறவைகள், மான்கள்
- தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள் - எ.கா: தேனீக்கள், வளர்ப்புப் பறவைகள், முயல்கள்
- கன்னி இனப்பெருக்கம் 1745 ல் சார்லஸ் பானட் என்பவரால் முதன் முதலில் கண்டறிப்பட்டது.
- இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் (Paedogenetic parthenogenesis/Paedogenesis) - கல்லீரல் புழு ஸ்போரோோரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள், பூச்சிகள் (மொழுக்கு ஈ (Gall fly).
- அர்ரீனோடோகி (Arrhenotoky) - எ.கா தேனீக்கள்
- தெலிடோகி (Thelytoky) - எ.கா.சொலனோபியா
- ஆம்ஃபிடோகி (Amphitoky) - எ.கா. ஏஃபிஸ்
- முட்டையிடுபவை (Oviparous) - எ.கா. ஊர்வன மற்றும் பறவைகள், முதுகெலும்பற்றவை, மீன்கள், இருவாழ்விகள்.
- குட்டி ஈனுபவை (Viviparous) - எ.கா. மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகள்
- தாயுள் முட்டைபொரித்து குட்டி ஈனுபவை (Ovoviviparous) - சுறாமீன்
- குட்டி ஈனும் வகையான எலுமிச்சை சுறா குட்டி ஈனுதல் - தாய் சேய் இணைப்புத் திசுவினால் தாயுடன் இணைக்கப்பட்ட நிலையில் இளம் சுறா.
2,3 மதிப்பெண் வினா விடைகள்
#. இனப்பெருக்கம் என்றால் என்ன?
அனைத்து உயிரினங்களின் அடிப்படை பண்பாகும். இந்த உயிரியல் நிகழ்வின் மூலம் உயிரிகள் தங்கள் சேய்களை உருவாக்குகின்றன.
#. இனப்பெருக்க முறையின் அடிப்படைப் பண்புகள் யாவை?
டி.என்.ஏ. இரட்டிப்பாதல், ஆர்.என்.ஏ.உற்பத்தி, புதர உற்பத்தி, செல் பிரிதல், வளர்ச்சி, இனப்பெருக்க அலகுகள் உருவாக்கம், கருவுறுதல் , புதிய சேய் உயிரிகள் உருவாதல்
#. உயிரினங்கள் மேற்கொள்ளும் இனப்பெருக்க முறைகள் யாவை?
பாலிலி மற்றும் பால் இனப்பெருக்கம்
# பாலிலி இனப்பெருக்கம் என்றால் என்ன ?
தனியொரு பெற்றோரால் இனச்செல் உருவாக்கம் இன்றி நடைபெறும் இனப்பெருக்கம் பாலிலி இனப்பெருக்கம் (Asexual reproduction) எனப்படும்.
# பாலினப்பெருக்கம் என்றால் என்ன ?
இனப்பெருக்க செயலில் இரு பெற்றோர் (ஆண், பெண்) ஈடுபட்டு இரண்டு வகை இனச்செல்கள் இணைந்து நடைபெறும் இனப்பெருக்கம் பாலினப் பெருக்கம் (Sexual reproduction) எனப்படும்.
(அல்லது)
ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவுற்று இருமய கருமுட்டையை (Diploid zygote) உருவாக்கி அதிலிருந்து ஒரு புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் முறையே பாலினப்பெருக்கம் ஆகும்.

# பாலிலி இனப்பெருக்க முறைகள் யாவை?
- பிளவுறுதல் (Fission),
- ஸ்போர்கள் உருவாக்கம் (Sporulation),
- முகிழ்த்தல் (Budding),
- ஜெம்யூல் ஆக்கம் (Gemmule formation),
- துண்டாதல் (Fragmentation)
- இழப்பு மீட்டல் (Regeneration)
# பிளவுறுதல் என்றால் என்ன?
பிளவுறுதல் முறையில் பெற்றோர் உடலானது இரண்டு அல்லது அதற்கும் அதிகமான அமைப்பொத்த சேய் உயிரிகளாகப் பிரிகின்றன.
# நான்கு வகை பிளவுறுதல் யாவை?
- இருசமப்பிளவு (Binary fission) முறை,
- பல பிளவு முறை (Multiple fission),
- ஸ்போர்கள் உருவாக்கம் (Sporulation)
- ஸ்ட்ரோபிலா ஆக்கம் (Strobilation)
இருசமப்பிளவு முறையில் பெற்றோர் உயிரி இரு சம பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது. முதலில் உட்கருவானது நேர்முக அல்லது மறைமுகப்பிரிவின் மூலம் பிரிவடைகிறது (Karyokinesis) (கேரியோகைனேசிஸ்). இதன் தொடர்ச்சியாக சைட்டோபிளாசம் பிரிவடைகிறது (Cytokinesis) (சைட்டோகைனேசிஸ்). இவ்விதம் உருவாகும் சேய் உயிரிகள் மரபியல்ரீதியாக பெற்றோரை ஒத்திருக்கின்றன.
# இரு சம பிளவு முறையின் பல்வேறு வகைகள் யாவை ?
அ) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை (Simple irregular binary fission)
ஆ) கிடைமட்ட இருசமபிளவு முறை (Transverse binary fission)
இ) நீள்மட்ட இருசமபிளவு முறை (Longitudinal binary fission)
ஈ) சாய்வுமட்ட இருசமபிளவு முறை (Oblique binary fission)
# பிளாஸ்மோடோமி என்றால் என்ன?
பல உட்கருக்களைக் கொண்ட பெற்றோர் உயிரியின் உட்கருக்கள் பிரிந்து பல உட்கருக்களைக் கொண்ட சேய் உயிரிகளை உருவாக்குதல் பிளாஸ்மோடோமி (Plasmotomy) எனப்படும்.
# அபோலைசிஸ்” (தற்சிதைவு) என்றால் என்ன ?
நாடாப்புழுக்களில் (டீனியா சோலியம்) (Taenia solium) வயதான பழுத்த கண்டங்கள் உடற்பகுதியான ஸ்ட்ரோபிலாவின் பின்முனையில் உள்ளன. இத்தகு பழுத்த கண்டங்கள் தனியாகவோ அல்லது தொகுப்பாகவோ உடலில் இருந்து பிரியும் செயலுக்கு “அபோலைசிஸ்” (தற்சிதைவு) (Apolysis) என்று பெயர்.
# இழப்பு மீட்டல் என்றால் என்ன ?
காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் (அல்லது) திசுக்கள் மறுவளர்ச்சி அடைவது ‘இழப்பு மீட்டல்’ (Regeneration) எனப்படும்.
# இழப்பு மீட்டல் இரு வகைகள் யாவை?
# உறுப்பு மீட்பு (Epimorphosis) என்றால் என்ன ?
இழந்த உடல் உறுப்புகளை மட்டும் மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் திறன் ஆகும்.
# உறுப்பு மீட்பு இரு வகைகள் யாவை?
‘ஒருங்கிணைவு’ (Syngamy) மற்றும் ‘இணைவு முறை இனப்பெருக்கம்’ (Conjugation)
# ஒருங்கிணைவு (Syngamy) என்பது யாது?
ஒருங்கிணைவு முறையில், இரு ஒற்றை மய இனச்செல்கள் (Haploid gametes) ஒன்றிணைந்து இரட்டைமய கருமுட்டை (Diploid zygote) உருவாக்கப்படுகிறது.
# வெளிக்கருவுறுதல் என்றால் என்ன?
பெண் உயிரியின் உடலுக்கு வெளியில், ஆண், பெண் இனச்செல்கள் இணைந்தால் குறிப்பாக அவை வாழும் நீர் வாழிடத்தில் நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் ‘வெளிக்கருவுறுதல்’ (External fertilization) எனப்படும். எ.கா: கடற்பஞ்சுகள், மீன்கள் மற்றும் இருவாழ்விகள்.
# உட்கருவுறுதல் என்றால் என்ன?
ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் ‘உட்கருவுறுதல்’ (Internal fertilization) என அழைக்கப்படும். எ.கா: ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள்.
# தன் கருவுறுதல் (Autogamy) என்றால் என்ன?
ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குகின்றன. எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
# அயல் கருவுறுதல் (exogamy) என்றால் என்ன?
ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது. எ.கா: மனிதன்
# முழுசேர்க்கை (Hologamy) என்றால் என்ன?
கீழ்நிலை உயிரிகளில், சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன. இது ‘முழுசேர்க்கை’ (Hologamy) எனப்படும். எ.கா டிரைக்கோநிம்ஃபா (Trichonympha).
# இளம் செல் சேர்க்கை (Paedogamy) என்றால் என்ன?
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் செயல் ‘இளம் செல் சேர்க்கை’ (Paedogamy) எனப்படும்.
# மாறுபட்ட செல்சேர்க்கை’ (Merogamy) என்றால் என்ன?
அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை ‘மாறுபட்ட செல்சேர்க்கை’ (Merogamy) எனப்படும்.
# ஒத்த செல் சேர்க்கை’ (Isogamy) என்றால் என்ன?
அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ‘ஒத்த செல் சேர்க்கை’ (Isogamy) எனப்படும். எ.கா. மோனோசிஸ்டிஸ்.
# வேறுபட்ட செல் சேர்க்கை’ (anisogamy) என்றால் என்ன?
முற்றிலும் வேறுபட்ட இரு இனச் செல்கள் ஒன்றிணையும் முறை ‘வேறுபட்ட செல் சேர்க்கை’ (anisogamy) எனப்படும்.
# இணைவு முறை இனப்பெருக்கம் என்றால் என்ன?
‘இணைவு முறை இனப்பெருக்கம்’ (Conjugation) என்னும் முறையில் ஒரே சிற்றினத்தைச் சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைதல் நடைபெறுகிறது. இவ்விணைதலில் ஈடுபடும் உயிரிகள் இணைவிகள் (Conjugants) என்று அழைக்கப்படுகின்றன. அவை தங்களுக்கிடையே குறிப்பிட்ட அளவு உட்கரு பொருட்களை (DNA) பரிமாறிக் கொண்ட பின் தனித்தனியாகப் பிரிகின்றன. பொதுவாக குறு இழை உயிரிகளில் இணைவு முறை இனப்பெருக்கம் காணப்படுகிறது. எ.கா: பாரமீசியம், வோர்ட்டிசெல்லா மற்றும் பாக்டீரியா (புரோகேரியோட்டுகள்).
# உயிரிகளின் வாழ்க்கைச் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை?
ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ‘பருவ கால இனச்சேர்க்கையாளர்கள்’ எனப்படும். எ.கா: தவளைகள், பல்லிகள், பெரும்பாலான பறவைகள், மான்கள் போன்றவை.
# தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள் என்றால் என்ன?
பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ‘தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள்’ ஆகும். எ.கா: தேனீக்கள், வளர்ப்புப் பறவைகள், முயல்கள் போன்றவை.
# முதுமை நிலை (Senescent phase) என்றால் என்ன?
இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் ஒரு உயிரியின் உடல்டல் அமைப்பிலும் செயல்பாடுகளிலும் சிதைவு ஏற்படத் தொடங்கும் நிலை முதுமை நிலை (Senescent phase) எனப்படும்.
# கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis) என்றால் என்ன?
அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு ‘கன்னி இனப்பெருக்கம்’ என்று பெயர்.
# இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis) என்றால் என்ன?
‘இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில்’ (Paedogenetic parthenogenesis/Paedogenesis) இளவுயிரியே (larvae) கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்குகிறது. கல்லீரல் புழுவின் ஸ்போரோோரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள் இவ்வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன. சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களிலும் இது நடைபெறுகிறது. எ.கா. மொழுக்கு ஈ (Gall fly).
# அர்ரீனோடோகி (Arrhenotoky) என்றால் என்ன?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எ.கா தேனீக்கள்
# தெலிடோகி (Thelytoky) என்றால் என்ன?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எ.கா.சொலனோபியா
# ஆம்ஃபிடோகி (Amphitoky) என்றால் என்ன?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் அண்ட செல் வளர்ச்சியுற்று ஆண் அல்லது பெண் உயிரியாக உருவாகின்றது. எ.கா. ஏஃபிஸ்
# முட்டையிடுபவை (Oviparous) என்றால் என்ன ?
முட்டையிடுபவை என அழைக்கப்படும் விலங்குகளில், தாயின் உடலிலிருந்து வெளியே இடப்பட்ட முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. எ.கா. ஊர்வன மற்றும் பறவைகள் (இவற்றின் முட்டைகள் சுண்ணாம்பினால் ஆன கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளன) முதுகெலும்பற்றவை, மீன்கள், இருவாழ்விகள் (இவற்றின் முட்டைகள் ஓட்டினால் மூடப்படவில்லை, மாறாக அவற்றின் முட்டைகள் ஒரு சவ்வினால் மூடப்பட்டுள்ளன)
# குட்டி ஈனுபவை (Viviparous) என்றால் என்ன ?
இளம் குட்டிகளை பிரசவிக்கும் விலங்குகள் குட்டி ஈனுபவை (viviparous – L.vivus-alive; parereto produce) எனப்படும். (படம் 1.15) தாய் சேய் இணைப்புத் திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியாக உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி குட்டி ஈனுதல் (Viviparity) எனப்படும். மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகள் குட்டி ஈனுபவை ஆகும்.
# தாயுள் முட்டைபொரித்து குட்டி ஈனுபவை (Ovoviviparous) என்றால் என்ன ?
தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் (ovoviviparous) விலங்குகளில் கருவானது முட்டைக்குள்ளேயே வளர்ச்சி அடைந்து பொரிந்து வெளியேறும் வரை தாயின் உடலுக்குள்ளேயே உள்ளது. (படம் 1.16) இவ்வகை இனப்பெருக்கம் குட்டி ஈனும் வகை போன்று தெரிந்தாலும் கருவுக்கும் தாய்க்கும் இடையில் தாய் சேய் இணைப்புத் திசு காணப்படுவதில்லை. கருவானது முட்டையின் கரு உணவுப் பையிலிருந்தே உணவூட்டம் பெறுகிறது. தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் பண்பு சுறாமீன் போன்றவைகளில் காணப்படுகிறது.

- ‘முழு உருவ மீட்பு’(Morphallaxis)
- ‘உறுப்பு மீட்பு’(Epimorphosis)
# முழு உருவ மீட்பு (Morphallaxis) என்றால் என்ன ?
முழுஉருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது. எ.கா. ஹைட்ரா மற்றும் பிளனேரியா.
இழந்த உடல் உறுப்புகளை மட்டும் மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் திறன் ஆகும்.
# உறுப்பு மீட்பு இரு வகைகள் யாவை?
- ‘சீராக்கல்’ (Reparative)
- ‘மீண்டும் உருவாக்குதல்’ (Restorative)
- சீராக்கல் இழப்பு மீட்டலில் உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன.
- மீண்டும் உருவாக்குதல் என்பது உடல் இழந்த அல்லது வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்கும் திறனாகும். எ.கா. நட்சத்திர மீன் மற்றும் சுவர்ப்பல்லி இழந்த வால்
‘ஒருங்கிணைவு’ (Syngamy) மற்றும் ‘இணைவு முறை இனப்பெருக்கம்’ (Conjugation)
# ஒருங்கிணைவு (Syngamy) என்பது யாது?
ஒருங்கிணைவு முறையில், இரு ஒற்றை மய இனச்செல்கள் (Haploid gametes) ஒன்றிணைந்து இரட்டைமய கருமுட்டை (Diploid zygote) உருவாக்கப்படுகிறது.
# வெளிக்கருவுறுதல் என்றால் என்ன?
பெண் உயிரியின் உடலுக்கு வெளியில், ஆண், பெண் இனச்செல்கள் இணைந்தால் குறிப்பாக அவை வாழும் நீர் வாழிடத்தில் நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் ‘வெளிக்கருவுறுதல்’ (External fertilization) எனப்படும். எ.கா: கடற்பஞ்சுகள், மீன்கள் மற்றும் இருவாழ்விகள்.
# உட்கருவுறுதல் என்றால் என்ன?
ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் ‘உட்கருவுறுதல்’ (Internal fertilization) என அழைக்கப்படும். எ.கா: ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள்.
# தன் கருவுறுதல் (Autogamy) என்றால் என்ன?
ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குகின்றன. எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
# அயல் கருவுறுதல் (exogamy) என்றால் என்ன?
ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது. எ.கா: மனிதன்
# முழுசேர்க்கை (Hologamy) என்றால் என்ன?
கீழ்நிலை உயிரிகளில், சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன. இது ‘முழுசேர்க்கை’ (Hologamy) எனப்படும். எ.கா டிரைக்கோநிம்ஃபா (Trichonympha).
# இளம் செல் சேர்க்கை (Paedogamy) என்றால் என்ன?
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் செயல் ‘இளம் செல் சேர்க்கை’ (Paedogamy) எனப்படும்.
# மாறுபட்ட செல்சேர்க்கை’ (Merogamy) என்றால் என்ன?
அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை ‘மாறுபட்ட செல்சேர்க்கை’ (Merogamy) எனப்படும்.
# ஒத்த செல் சேர்க்கை’ (Isogamy) என்றால் என்ன?
அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ‘ஒத்த செல் சேர்க்கை’ (Isogamy) எனப்படும். எ.கா. மோனோசிஸ்டிஸ்.
# வேறுபட்ட செல் சேர்க்கை’ (anisogamy) என்றால் என்ன?
முற்றிலும் வேறுபட்ட இரு இனச் செல்கள் ஒன்றிணையும் முறை ‘வேறுபட்ட செல் சேர்க்கை’ (anisogamy) எனப்படும்.
# இணைவு முறை இனப்பெருக்கம் என்றால் என்ன?
‘இணைவு முறை இனப்பெருக்கம்’ (Conjugation) என்னும் முறையில் ஒரே சிற்றினத்தைச் சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைதல் நடைபெறுகிறது. இவ்விணைதலில் ஈடுபடும் உயிரிகள் இணைவிகள் (Conjugants) என்று அழைக்கப்படுகின்றன. அவை தங்களுக்கிடையே குறிப்பிட்ட அளவு உட்கரு பொருட்களை (DNA) பரிமாறிக் கொண்ட பின் தனித்தனியாகப் பிரிகின்றன. பொதுவாக குறு இழை உயிரிகளில் இணைவு முறை இனப்பெருக்கம் காணப்படுகிறது. எ.கா: பாரமீசியம், வோர்ட்டிசெல்லா மற்றும் பாக்டீரியா (புரோகேரியோட்டுகள்).
# உயிரிகளின் வாழ்க்கைச் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை?
- இளம் உயிரிநிலை / வளராக்க நிலை (Juvenile Phase/Vegetative Phase),
- இனப்பெருக்க நிலை /முதிர்ச்சி நிலை (Reproductive Phase/Maturity Phase)
- முதுமை நிலை (Senescent Phase).
ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ‘பருவ கால இனச்சேர்க்கையாளர்கள்’ எனப்படும். எ.கா: தவளைகள், பல்லிகள், பெரும்பாலான பறவைகள், மான்கள் போன்றவை.
# தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள் என்றால் என்ன?
பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ‘தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள்’ ஆகும். எ.கா: தேனீக்கள், வளர்ப்புப் பறவைகள், முயல்கள் போன்றவை.
# முதுமை நிலை (Senescent phase) என்றால் என்ன?
இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் ஒரு உயிரியின் உடல்டல் அமைப்பிலும் செயல்பாடுகளிலும் சிதைவு ஏற்படத் தொடங்கும் நிலை முதுமை நிலை (Senescent phase) எனப்படும்.
# கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis) என்றால் என்ன?
அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு ‘கன்னி இனப்பெருக்கம்’ என்று பெயர்.
# இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis) என்றால் என்ன?
‘இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில்’ (Paedogenetic parthenogenesis/Paedogenesis) இளவுயிரியே (larvae) கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்குகிறது. கல்லீரல் புழுவின் ஸ்போரோோரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள் இவ்வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன. சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களிலும் இது நடைபெறுகிறது. எ.கா. மொழுக்கு ஈ (Gall fly).
# அர்ரீனோடோகி (Arrhenotoky) என்றால் என்ன?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எ.கா தேனீக்கள்
# தெலிடோகி (Thelytoky) என்றால் என்ன?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எ.கா.சொலனோபியா
# ஆம்ஃபிடோகி (Amphitoky) என்றால் என்ன?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் அண்ட செல் வளர்ச்சியுற்று ஆண் அல்லது பெண் உயிரியாக உருவாகின்றது. எ.கா. ஏஃபிஸ்
# முட்டையிடுபவை (Oviparous) என்றால் என்ன ?
முட்டையிடுபவை என அழைக்கப்படும் விலங்குகளில், தாயின் உடலிலிருந்து வெளியே இடப்பட்ட முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. எ.கா. ஊர்வன மற்றும் பறவைகள் (இவற்றின் முட்டைகள் சுண்ணாம்பினால் ஆன கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளன) முதுகெலும்பற்றவை, மீன்கள், இருவாழ்விகள் (இவற்றின் முட்டைகள் ஓட்டினால் மூடப்படவில்லை, மாறாக அவற்றின் முட்டைகள் ஒரு சவ்வினால் மூடப்பட்டுள்ளன)
# குட்டி ஈனுபவை (Viviparous) என்றால் என்ன ?
இளம் குட்டிகளை பிரசவிக்கும் விலங்குகள் குட்டி ஈனுபவை (viviparous – L.vivus-alive; parereto produce) எனப்படும். (படம் 1.15) தாய் சேய் இணைப்புத் திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியாக உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி குட்டி ஈனுதல் (Viviparity) எனப்படும். மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகள் குட்டி ஈனுபவை ஆகும்.
# தாயுள் முட்டைபொரித்து குட்டி ஈனுபவை (Ovoviviparous) என்றால் என்ன ?
தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் (ovoviviparous) விலங்குகளில் கருவானது முட்டைக்குள்ளேயே வளர்ச்சி அடைந்து பொரிந்து வெளியேறும் வரை தாயின் உடலுக்குள்ளேயே உள்ளது. (படம் 1.16) இவ்வகை இனப்பெருக்கம் குட்டி ஈனும் வகை போன்று தெரிந்தாலும் கருவுக்கும் தாய்க்கும் இடையில் தாய் சேய் இணைப்புத் திசு காணப்படுவதில்லை. கருவானது முட்டையின் கரு உணவுப் பையிலிருந்தே உணவூட்டம் பெறுகிறது. தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் பண்பு சுறாமீன் போன்றவைகளில் காணப்படுகிறது.
பாடம் 1 உயிரிகளின் இனப்பெருக்கம்
உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியில் பிறப்பு, வளர்ச்சி, முதிர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் இறப்பு ஆகிய நிகழ்வுகள் காணப்படுகின்றன. இனப்பெருக்கம் என்பது அனைத்து உயிரினங்களின் அடிப்படை பண்பாகும். இந்த உயிரியல் நிகழ்வின் மூலம் உயிரிகள் தங்கள் சேய்களை உருவாக்குகின்றன. இச்சேய் உயிரிகள் வளர்ந்து முதிர்ச்சியடைந்த பின் இனப்பெருக்க நிகழ்வை தொடர்கின்றன. இவ்வாறாக, இனப்பெருக்கத்தினால் சிற்றினத் தொடர்ச்சி ஏற்படுவதுடன் உயிரினங்களினூடே மாறுபாடுகளும் தோன்றுகின்றன. இந்த மாறுபாடுகள் உயிரினங்களின் தகவமைப்பு மற்றும் பரிணாமத்திற்கு அத்தியாவசியமானவை ஆகும்.
1.1 இனபெருக்க முறைகள்
அனைத்து இனப்பெருக்க முறைகளிலும் டி.என்.ஏ. இரட்டிப்பாதல் ஆர்.என்.ஏ.உற்பத்தி, புதர உற்பத்தி, செல் பிரிதல்,வளர்ச்சி, இனப்பெருக்க அலகுகள் உருவாக்கம், அவை இணைந்து கருவுறுதல் நடைபெற்று புதிய சேய் உயிரிகள் உருவாதல் போன்ற அடிப்படைப் பண்புகள் காணப்படுகின்றன. உயிரினங்கள் பாலிலி மற்றும் பாலினப்பெருக்கம் எனும் இருபெரும் இனப்பெருக்க முறைகளை மேற்கொள்கின்றன. தனியொரு பெற்றோரால் இனச்செல் உருவாக்கம் இன்றி நடைபெறும் இனப்பெருக்கம் பாலிலி இனப்பெருக்கம் (Asexual reproduction) எனப்படும். இதன் வழி உற்பத்தியாகும் சேய் உயிரினங்கள் மரபொத்தனவாக இருக்கும். உடல் செல்களில் நேரடி செல் பகுப்பு (Amitosis) அல்லது மறைமுக செல் பகுப்பு (Mitosis) முறைகளில் நடைபெறுவதால் இது உடலால் தோன்றும் இனப்பெருக்கம் (Somatogenic) அல்லது கருங்கோளத்தால் தோன்றும் இனப்பெருக்கம் (Blastogenic) என்று அழைக்கப்படுகின்றது. இனப்பெருக்க செயலில் இரு பெற்றோர் (ஆண், பெண்) ஈடுபட்டு இரண்டு வகை இனச்செல்கள் இணைந்து நடைபெறும் இனப்பெருக்கம் பாலினப்பெருக்கம் (Sexual reproduction) எனப்படும்.
1.2 பாலிலி இனப்பெருக்கம்
பரவலாக பல்வேறு உயிரினங்களில் பாலிலி இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. பொதுவாக புரோட்டிஸ்டா, பாக்டீரியா, ஆர்க்கியா மற்றும் எளிய கட்டமைப்பு கொண்ட பலசெல் உயிரிகளில் பாலிலி இனப்பெருக்கம் காணப்படுகின்றது. இதன் மூலம் தோன்றும் சேய் உயிரிகள், மரபு மாறுபாடுகள் இன்றி “ஒற்றை பெற்றோர் மரபுப் பண்புகளைக்” கொண்டிருக்கின்றன. பிளவுறுதல் (Fission), ஸ்போர்கள் உருவாக்கம் (Sporulation), முகிழ்த்தல் (Budding), ஜெம்யூல் ஆக்கம் (Gemmule formation), துண்டாதல் (Fragmentation) மற்றும் இழப்பு மீட்டல் (Regeneration) ஆகிய பல்வேறு பாலிலி இனப்பெருக்க முறைகள் விலங்குகளில் காணப்படுகின்றன.
பிளவுறுதல் முறையில் பெற்றோர் உடலானது இரண்டு அல்லது அதற்கும் அதிகமான அமைப்பொத்த சேய் உயிரிகளாகப் பிரிகின்றன. இருசமப்பிளவு (Binary fission) முறை, பல பிளவு முறை (Multiple fission), ஸ்போர்கள் உருவாக்கம் (Sporulation) மற்றும் ஸ்ட்ரோபிலா ஆக்கம் (Strobilation) ஆகிய நான்கு வகை பிளவுறுதல் விலங்குகளில் காணப்படுகின்றன.
இருசமப்பிளவு முறையில் பெற்றோர் உயிரி இரு சம பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது. முதலில் உட்கருவானது நேர்முக அல்லது மறைமுகப்பிரிவின் மூலம் பிரிவடைகிறது (Karyokinesis) (கேரியோகைனேசிஸ்). இதன் தொடர்ச்சியாக சைட்டோபிளாசம் பிரிவடைகிறது (Cytokinesis) (சைட்டோகைனேசிஸ்). இவ்விதம் உருவாகும் சேய் உயிரிகள் மரபியல் ரீதியாக பெற்றோரை ஒத்திருக்கின்றன.
பிளவு மட்டத்தைப் பொறுத்து இரு சம பிளவு முறையானது,
அ) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை (Simple irregular binary fission)
ஆ) கிடைமட்ட இருசமபிளவு முறை (Transverse binary fission)
இ) நீள்மட்ட இருசமபிளவு முறை (Longitudinal binary fission)
ஈ) சாய்வுமட்ட இருசமபிளவு முறை (Oblique binary fission)
என வகைப்படுத்தப்படுகின்றன.
அ) எளிய ஒழுங்கற்ற இருசமபிளவு முறை (Simple irregular binary fission)
இவ்வகை பிளவுறுதல் அமீபா போன்ற ஒழுங்கற்ற வடிவமுடைய உயிரிகளில் நடைபெறுகின்றது (படம் 1.1). இதில் பிளவு மட்டத்தை கண்டறிதல் கடினமானதாகும். இம்முறையில் சுருங்கு நுண் குமிழ் செயலிழந்து மறைந்து விடும். உட்கருமணி மறைந்து உட்கருவானது மறைமுகப்பிரிவு முறையில் பிளவுபடும். பின்னர், செல்லின் நடுவில் சுருக்கம் ஏற்பட்டு சைட்டோபிளாசம் பிரிந்து இரு சேய் செல்கள் தோன்றுகின்றன.
ஆ) கிடைமட்ட இருசமபிளவுமுறை (Transverse binary fission)
இவ்வகை முறையில் பிளவு மட்டம் உயிரியின் கிடைமட்ட அச்சில் ஏற்படுகின்றது. எ.கா: பாரமீசியம் மற்றும் பிளனேரியா. பாரமீசியத்தில் (படம் 1.2) பெரிய உட்கரு நேர்முகப் பிரிவு முறையிலும் சிறிய உட்கரு மறைமுகப்பிரிவு முறையிலும் பிரிவடைகின்றன.
இ) நீள்மட்ட இருசமபிளவு முறை (Longitudinal binary fission)
இவ்வகை முறையில் உட்கரு மற்றும் சைட்டோபிளாசம் உயிரியின் நீள் அச்சில் பிரிவடைகின்றது (படம் 1.3).நீளிழை உயிரிகளில் பிளவின்போது நீளிழையானது ஒரு சேய் செல்லில் தக்க வைக்கப்படுகின்றது. அடிப்படைத் துகள் இரண்டாகப் பிரிகிறது. புதிய அடிப்படைத்துகள் மற்றொரு சேய் செல்லின் நீளிழையைத் தோற்றுவிக்கின்றது. எ.கா: வோர்டிசெல்லா மற்றும் யூக்ளினா.
ஈ) சாய்வுமட்ட இருசமபிளவு முறை (Oblique binary fission)
சாய்வுமட்ட இருசமபிளவு முறையில் பிளவுமட்டம் சாய்வாக அமைகின்றது. டைனோஃபிளாஜெல்லேட்டுகளில் இவ்வகைப் பிளவுறுதல் காணப்படுகிறது. எ.கா: செராஷியம்
பல பிளவு முறை
பல பிளவு முறையில் பெற்றோரின் உடல், ஒத்த அமைப்புடைய பல சேய் உயிரிகளாக பிரிவடைகின்றது. முதலில், சைட்டோபிளாசம் பிரிவடையாமல், உட்கரு தொடர்ந்து பிரிவடைந்து, பல உட்கருக்கள் உருவாகின்றன. பின்னர் உட்கரு எண்ணிக்கைக்கு ஏற்ப சைட்டோபிளாசம் பல பகுதிகளாகப் பிரிவடைந்து, ஒவ்வொரு சைட்டோபிளாச பகுதியும் ஒரு சேய் உட்கருவைச் சூழ்ந்து கொண்டு ஓர் உயிரியாக மாறுகின்றது. இதன் மூலம் ஒற்றை பெற்றோர் உயிரியிலிருந்து பல சிறிய சேய் உயிரிகள் தோன்றுகின்றன. பல பிளவு முறையில் சமமான செல் பிரிதலினால் ஒரு உயிரியிலிருந்து நான்கு அல்லது பல சேய் உயிரிகள் தோன்றுகின்றன. மேலும், பிளவுறுதல் நிகழ்வு முழுமையடையும் வரை சேய் உயிரிகள் பிரிவதில்லை. இத்தகு பிரிவிற்கு பன்மடி பகுப்பு (Repeated fission) என்று பெயர். எ.கா: வோர்டிசெல்லா.
பிளாஸ்மோடியத்தில் சைஷாண்ட் மற்றும் ஊசைட் நிலையில் பல பிளவு முறை நடைபெறுகிறது. சைஷான்ட் நிலையில் பல பிளவு முறை நடைபெறுதலுக்கு சைஷோகனி என்று பெயர். இந்த சேய் உயிரிகள் மீரோசோயிட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன (படம் 1.4).
ஊசைட் நிலையில் நடைபெறும் பல பிளவு முறை ஸ்போரோகனி என்றும் சேய் உயிரிகள் ஸ்போரோசோயிட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சாதகமற்ற சூழலில் (வெப்பநிலை, அதிகரித்தல் அல்லது குறைதல் மற்றும் உணவுத் தட்டுப்பாடு) அமீபா போலிக்கால்களை உள்ளிழுத்துக் கொண்டு தன்னைச் சுற்றி கைட்டின் என்னும் பொருளால் ஆன மூன்று அடுக்கு சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து அதனுள் செயலற்று உறைகிறது (படம் 1.5).இந்நிகழ்வுக்கு ‘உறையாக்கம்’ (encystment) என்று பெயர்.

சாதகமான சூழல் ஏற்படும்போது உறையிலுள்ள அமீபா பல பிளவு முறையில் பகுப்படைந்து எண்ணற்ற சிறிய ‘போலிக்காலி ஸ்போர்கள்’ அல்லது ‘அமீபுலே’வை உற்பத்தி செய்கின்றன. சிஸ்ட் உறை நீரை உறிஞ்சி சிதைவடைதல், நுண்ணிய போலிக்கால்களைக் கொண்ட சேய் போலிக்காலி ஸ்போர்கள் வெளிவருகின்றன. இவை உணவுண்டு, துரிதமாக வளர்ந்து தனித்து செயற்படக்கூடிய வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றன.
பலசெல் உயிரிகள் சிலவற்றில் ஸ்ட்ரோபிலா ஆக்கம் (Strobilation) எனும் சிறப்பு வகை கிடைமட்டப்பிளவு நடைபெறுகின்றது (படம் 1.6).
ஸ்ட்ரோபிலா ஆக்க நிகழ்வில் பல கிடைமட்டப் பிளவுகள் ஒரே நேரத்தில் நடைபெற்று தனித்துப் பிரியாத எண்ணற்ற உயிரிகளை உருவாக்குகின்றன. எ.கா: ஆரிலியா. பல உட்கருக்களைக் கொண்ட பெற்றோர் உயிரியின் உட்கருக்கள் பிரிந்து பல உட்கருக்களைக் கொண்ட சேய் உயிரிகளை உருவாக்குதல் பிளாஸ்மோடோமி (Plasmotomy) எனப்படும். பின்னர் உட்கருக்கள் பிளந்து இயல்பான எண்ணிக்கையை நிலைப்படுத்துகின்றன. ஒபாலினா மற்றும் பிலோமிக்ஸா (இராட்சத அமீபா) ஆகியனவற்றில் பிளாஸ்மோடோமி முறை காணப்படுகின்றது.
அமீபாக்கள், சாதகமற்ற சூழ்நிலைகளில் “ஸ்போர் உருவாக்கம்” முறையில் மேலுறையை உருவாக்காமல் எண்ணிக்கையில் பெருக்கமடைகின்றன. உட்கரு பல சிறு துண்டுகளாகவோ அல்லது குரோமட்டின் தொகுப்புகளாகவோ உடைகிறது. பின் ஒவ்வொரு துண்டைச் சுற்றிலும் உட்கருச் சவ்வு உருவாகிறது.அவை பின்னர் சைட்டோடோபிளாசத்தினால் சூழப்பட்ட பின் தம்மைச்சுற்றிலும் ஓர் ஸ்போர் உறையை உருவாக்குகிறது (படம் 1.7).
சூழ்நிலை சாதகமாகும்போது பெற்றோர் உடல் சிதைந்து ஸ்போர்கள் வெளியேற்றப்படுகின்றன. ஸ்போர்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு இளம் அமீபா வெளிவருகின்றது.
முகிழ்த்தல் (Budding)
முகிழ்த்தல் (Budding) முறையில் பெற்றோர் உயிரிகளின் உடலில் ஒன்று அல்லது பல மொட்டுகள் தோன்றி ஒவ்வொன்றும் ஒரு சேய் உயிரி ஆகின்றது. பின்னர் ஒவ்வொரு மொட்டும் பெற்றோரை விட்டுப்பிரிந்து இயல்பான வாழ்க்கையைத் தொடர்கின்றது. எடுத்துக்காட்டாக, கடற் பஞ்சுகளில் உருவாகும் மொட்டுகளின் அடிப்பகுதி குறுகி பெற்றோரை விட்டுப் பிரிந்து புதிய உயிரியாகின்றது. (படம் 1.8).
பெற்றோர் உடலின் வெளிப்பகுதியில் மொட்டுகள் உருவானால் அதற்கு புற முகிழ்த்தல் (Exogenous budding) என்று பெயர். எ.கா: ஹைட்ரா. ஹைட்ராவில் உணவு அதிகம் கிடைக்கும்போது புறப்படை செல்கள் பெருகி உடலின் மேற்பகுதியில் ஒரு புடைப்பை உருவாக்குகின்றது (படம் 1.9).
புறப்படை மற்றும் அகப்படை வெளிநோக்கி தள்ளப்பட்டு மொட்டு உருவாகின்றது. இந்த மொட்டில் பெற்றோர் உயிரியின் குடற்குழி நீண்டுள்ளது. மொட்டின் நுனியில் வாயும் மற்றும் அதனைச் சுற்றி உணர்நீட்சிகளும் வளர்கின்றன. முழுவதும் வளர்ந்த பிறகு மொட்டின் அடப்பகுதி சுருங்கி பெற்றோர் உடலிலிருந்து பிரிந்து தனித்த வாழ்க்கையை மேற்கொள்கின்றது.
நாக்டிலூகா-வில் நூற்றுக்கணக்கான மொட்டுகள் சைட்டோபிளாசத்தினுள் உருவாகி பெற்றோர் உடலினுள்ளேயே இருக்கும் நிலை அக முகிழ்த்தல் (endogenous budding) எனப்படும். நன்னீர் பஞ்சுகள் மற்றும் சில கடற் பஞ்சுகளில் ஜெம்யூல்கள் (Gemmules) என்னும் உள்ளமை மொட்டுகள் உருவாக்கத்தின் மூலம் சீரான மற்றும் தனித்துவமான பாலிலி இனப்பெருக்கம் நடைபெறுகின்றது (படம். 1.10).
முழுவளர்ச்சி பெற்ற ஜெம்மியூல் உறுதியான பந்து போன்ற அமைப்புடையதாகும். இதன் உட்பகுதியில் உணவுப் பொருள் தாங்கிய ஆர்க்கியோசைட்டுகள் காணப்படுகின்றன. சாதகமற்ற சூழலில் பஞ்சுகள் சிதைந்தாலும் ஜெம்யூல்கள் மிக பாதகமான சூழலையும் தாங்கி நிலைத்திருக்கின்றன. சாதகமான சூழல் வரும்போது ஜெம்யூல்கள் பொரித்து பஞ்சுகள் வெளிப்படுகின்றன.
துண்டாதல் முறையில் (fragmentation) பெற்றோர் உடலானது பல துண்டுகளாகப் பிரிகின்றது. பிரிந்த ஒவ்வொரு துண்டும் புதிய உயிரியாக வளரும் திறனுடையது. துண்டாதல் அல்லது அடிப்பகுதி துண்டாதல் முறை இனப்பெருக்கம் கடல் சாமந்தியின் பல பேரினங்களில் நடைபெறுகின்றது. பாதத்தட்டுகளின் அடிப்பகுதியில் ஏற்படும் சுருக்கங்களால் பிரிந்த கதுப்புகள் ஒவ்வொன்றிலும் குடல் தாங்கிகளும் (Mesenteries) உணர்கொம்புகளும் (Tentacles) வளர்ந்து புதிய கடற்சாமந்திகள் உருவாகின்றன.
நாடாப்புழுக்களில் (டீனியா சோலியம்) (Taenia solium) வயதான பழுத்த கண்டங்கள் உடற்பகுதியான ஸ்ட்ரோபிலாவின் பின்முனையில் உள்ளன. இத்தகு பழுத்த கண்டங்கள் தனியாகவோ அல்லது தொகுப்பாகவோ உடலில் இருந்து பிரியும் செயலுக்கு “அபோலைசிஸ்” (தற்சிதைவு) (Apolysis) (படம் 1.11) என்று பெயர்.
இதன் மூலம் வளர்ந்த கருவானது முதல் நிலை விருந்தோம்பி (மனிதன்)யிடமிருந்து இரண்டாம் நிலை விருந்தோம்பி (பன்றி)யை அடைவதால் இந்நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இழப்பு மீட்டல்’ (Regeneration)
காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் (அல்லது) திசுக்கள் மறுவளர்ச்சி அடைவது ‘இழப்பு மீட்டல்’ (Regeneration) எனப்படும். 1740ல் ஆபிரகாம் டிரம்ப்ளி என்னும் அறிவியலாளர் ஹைட்ராவில் ‘இழப்பு மீட்டல்’ குறித்து முதன் முதலில் ஆய்வு மேற்கொண்டார். இழப்பு மீட்டல் இருவகைப்படும். அவை,
முழு உருவ மீட்பு (Morphallaxis)
முழுஉருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது. எ.கா. ஹைட்ரா மற்றும் பிளனேரியா. ஹைட்ராவை பல துண்டுகளாக வெட்டினால் ஒவ்வொரு துண்டும் தனது இழந்த பகுதிகளை வளரச் செய்து ஒரு முழுமையான புதிய ஹைட்ராவை உருவாக்குகின்றது (படம்1.12). இந்த இழப்பு மீட்டலில் உறுப்புகள் தங்களது துருவத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்கின்றன. வாய்முனை (Oral ends) உணர் நீட்சிகளையும் (Tentacles), வாய் எதிர்முனை (Aboral ends) அடித்தட்டுகளையும் உருவாக்கிக் கொள்கின்றன.

- முழு உருவ மீட்பு (Morphallaxis)
- உறுப்பு மீட்பு (Epimorphosis)
முழு உருவ மீட்பு (Morphallaxis)
முழுஉருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது. எ.கா. ஹைட்ரா மற்றும் பிளனேரியா. ஹைட்ராவை பல துண்டுகளாக வெட்டினால் ஒவ்வொரு துண்டும் தனது இழந்த பகுதிகளை வளரச் செய்து ஒரு முழுமையான புதிய ஹைட்ராவை உருவாக்குகின்றது (படம்1.12). இந்த இழப்பு மீட்டலில் உறுப்புகள் தங்களது துருவத்தன்மையைத் தக்க வைத்துக் கொள்கின்றன. வாய்முனை (Oral ends) உணர் நீட்சிகளையும் (Tentacles), வாய் எதிர்முனை (Aboral ends) அடித்தட்டுகளையும் உருவாக்கிக் கொள்கின்றன.
உறுப்பு மீட்பு (Epimorphosis)
உறுப்பு மீட்பு என்பது இழந்த உடல் உறுப்புகளை மட்டும் மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் திறன் ஆகும். இது இரு வகைப்படும். அவை
சீராக்கல் இழப்பு மீட்டலில் உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன.
மீண்டும் உருவாக்குதல் என்பது உடல் இழந்த அல்லது வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்கும் திறனாகும். எ.கா. நட்சத்திர மீன் மற்றும் சுவர்ப்பல்லி இழந்த வால் (படம் 1.13).

- சீராக்கல் (Reparative) வகை இழப்பு மீட்டல்.
- மீண்டும் உருவாக்குதல் (Restorative) வகை இழப்பு மீட்டல்.
சீராக்கல் இழப்பு மீட்டலில் உடலில் சேதமுற்ற சில வகையான திசுக்கள் மட்டும் சரி செய்யப்படுகின்றன.
மீண்டும் உருவாக்குதல் என்பது உடல் இழந்த அல்லது வெட்டுண்ட பகுதியை முழுமையாக உருவாக்கும் திறனாகும். எ.கா. நட்சத்திர மீன் மற்றும் சுவர்ப்பல்லி இழந்த வால் (படம் 1.13).
இழப்பு மீட்டல் திறன்
சிதைக்கப்பட்ட கடற்பஞ்சினை ஒரு மெல்லிய பட்டுத்துணியின் வழியாக பிழிந்தால் கிடைக்கும் செல் தொகுப்பு மீண்டும் புதிய முழுமையான கடற்பஞ்சுகளாக உருவாக இயலும். இத்தொழில் நுட்பம் செயற்கை முறை கடற்பஞ்சு வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது.
1.3 பாலினப்பெருக்கம்
ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் இணைவுற்று இருமய கருமுட்டையை (Diploid zygote) உருவாக்கி அதிலிருந்து ஒரு புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் முறையே பாலினப்பெருக்கம் ஆகும். இதன்மூலம் மரபியல் வேறுபாடுகள் உருவாகின்றன. ‘ஒருங்கிணைவு’ (Syngamy) மற்றும் ‘இணைவு முறை இனப்பெருக்கம்’ (Conjugation) என்னும் இருமுறைகளில் பாலினப் பெருக்கம் நடைபெறுகிறது.
ஒருங்கிணைவு முறையில், இரு ஒற்றை மய இனச்செல்கள் (Haploid gametes) ஒன்றிணைந்து இரட்டைமய கருமுட்டை (Diploid zygote) உருவாக்கப்படுகிறது.
கருவுறுதலின் நிகழ்விடத்தைப் பொறுத்து ஒருங்கிணைவு முறை இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வெளிக்கருவுறுதல்
பெண் உயிரியின் உடலுக்கு வெளியில், ஆண், பெண் இனச்செல்கள் இணைந்தால் குறிப்பாக அவை வாழும் நீர் வாழிடத்தில் நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் ‘வெளிக்கருவுறுதல்’ (External fertilization) எனப்படும். எ.கா: கடற்பஞ்சுகள், மீன்கள் மற்றும் இருவாழ்விகள்.
உட்கருவுறுதல்
ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் ‘உட்கருவுறுதல்’ (Internal fertilization) என அழைக்கப்படும். எ.கா: ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள்.
உயிரிகளில் பல்வேறு வகையான ஒருங்கிணைவு (கருவுறுதல்) நடைபெறுகிறது.
தன் கருவுறுதல் (Autogamy)
‘தன் கருவுறுதலில்’ (Autogamy) ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குகின்றன. எ.கா: ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.
அயல் கருவுறுதல் (exogamy)
‘அயல் கருவுறுதலில்’ (exogamy) ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது. எனவே, இது இரு பெற்றோர் வகையானது. எ.கா: மனிதனில் ஆண் பெண் என்னும் இரு தனித்தனி உயிரிகள் காணப்படுதல். (டயோஷியஸ் அல்லது ஒரு பால்-உயிரி (Dioecious or Unisexual)
முழுசேர்க்கை (Hologamy)
கீழ்நிலை உயிரிகளில், சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல், அவ்வயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன. இது ‘முழுசேர்க்கை’ (Hologamy) எனப்படும். எ.கா டிரைக்கோநிம்ஃபா (Trichonympha).
இளம் செல் சேர்க்கை (Paedogamy)
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் செயல் ‘இளம் செல் சேர்க்கை’ (Paedogamy) எனப்படும்.
மாறுபட்ட செல்சேர்க்கை (Merogamy)
அமைப்பில் மாறுபட்ட இரு சிறிய இனச்செல்கள் ஒன்றிணையும் முறை ‘மாறுபட்ட செல்சேர்க்கை’ (Merogamy) எனப்படும்.
ஒத்த செல் சேர்க்கை (Isogamy)
அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ‘ஒத்த செல் சேர்க்கை’ (Isogamy) எனப்படும். எ.கா. மோனோசிஸ்டிஸ்.
வேறுபட்ட செல் சேர்க்கை (anisogamy)
முற்றிலும் வேறுபட்ட இரு இனச் செல்கள் ஒன்றிணையும் முறை ‘வேறுபட்ட செல் சேர்க்கை’ (anisogamy) (Gr. An without; iso-equal; gam-marriage) எனப்படும். இவ்வகைக் கருவுறுதல் உயர்வகை விலங்குகளில் நடைபெறுகிறது. ஆனால், அவ்விலங்குகளில் ‘வேறுபட்ட செல் சேர்க்கை’(Anisogamy) ‘ஒருங்கிணைவு’ (Syngamy) போன்ற வார்த்தைகளை விட கருவுறுதல் (Fertilization) என்னும் வார்த்தைப் பயன்பாடே நடைமுறையில் உள்ளது. எ.கா. உயர்நிலை முதுகெலும்பற்றவை மற்றும் அனைத்து முதுகெலும்பிகள்.
இணைவு முறை இனப்பெருக்கம்
‘இணைவு முறை இனப்பெருக்கம்’ (Conjugation) என்னும் முறையில் ஒரே சிற்றினத்தைச் சார்ந்த இரு உயிரிகள் தற்காலிகமாக இணைதல் நடைபெறுகிறது. இவ்விணைதலில் ஈடுபடும் உயிரிகள் இணைவிகள் (Conjugants) என்று அழைக்கப்படுகின்றன. அவை தங்களுக்கிடையே குறிப்பிட்ட அளவு உட்கரு பொருட்களை (DNA) பரிமாறிக் கொண்ட பின் தனித்தனியாகப் பிரிகின்றன. பொதுவாக குறு இழை உயிரிகளில் இணைவு முறை இனப்பெருக்கம் காணப்படுகிறது. எ.கா: பாரமீசியம், வோர்ட்டிசெல்லா மற்றும் பாக்டீரியா (புரோகேரியோட்டுகள்).
வாழ்க்கைச் சுழற்சியின் நிலைகள்
உயிரிகள் தங்கள் வாழ்க்கை சுழற்சியில் மூன்று நிலைகளைக் (Phases) கொண்டுள்ளன.
அவை,
ஒரு உயிரியின் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக்காலம் ‘இளம் உயிரி நிலை’ எனப்படும்.
இனப்பெருக்க நிலை
ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித் தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.
இனச்சேர்க்கையுறும் காலத்தைப் பொறுத்து விலங்குகள் இரு வகையாகப் பிரிக்கப்படும். அவை,
பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ‘தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள்’ ஆகும். எ.கா: தேனீக்கள், வளர்ப்புப் பறவைகள், முயல்கள் போன்றவை.
இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் ஒரு உயிரியின் உடல்டல் அமைப்பிலும் செயல்பாடுகளிலும் சிதைவு ஏற்படத் தொடங்கும் நிலை முதுமை நிலை (Senescent phase) எனப்படும்.
கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis)
(Gr. Parthenos – virgin, Genesis – produce) அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு ‘கன்னி இனப்பெருக்கம்’ என்று பெயர். இது, 1745ல் சார்லஸ் பானட் என்பவரால் முதன் முதலில் கண்டறிப்பட்டது. கன்னி இனப்பெருக்கம் இருவகைப்படும்.
அவை,
இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, ‘முழுமையான’ (Complete) மற்றும் ‘முழுமையற்ற’ (Incomplete) கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
சில விலங்குகளில், இரு பெற்றோர்களால் நிகழும் பாலினப் பெருக்கம் நடைபெறுவதில்லை. மாறாக, அவை முழுமையான கன்னி இனப்பெருக்கம் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்விலங்குகளில் ஆண் உயிரிகளே காணப்படுவதில்லை. பெண் உயிரிகள் மட்டுமே உள்ளன. முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் சில விலங்குகளில், பாலினப் பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே நடைபெறுகின்றன. எ.கா: தேனீக்களில், கருவுற்ற முட்டை இராணித் தேனீயாகவும் வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்ச்சியுறுகின்றன. அதே வேளையில், கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக வளர்ச்சியடைகின்றன.
‘இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில்’ (Paedogenetic parthenogenesis/Paedogenesis) இளவுயிரியே (larvae) கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்குகிறது. கல்லீரல் புழுவின் ஸ்போரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள் இவ்வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களிலும் இது நடைபெறுகிறது. எ.கா. மொழுக்கு ஈ (Gall fly).
செயற்கை கன்னி இனப்பெருக்கத்தில் கருவுறாத அண்டம் இயற்பிய அல்லது வேதிய தூண்டல்கள் மூலம் தூண்டப்பட்டு முழு உயிரியாக வளர்ச்சியடைகின்றன. எ.கா: வளை தசை புழுக்கள் மற்றும் கடல் அர்ச்சின்.
உங்களுக்கு தெரியுமா?
இயற்கையான கன்னி இனப்பெருக்கம் பல வகைப்படும்.
அ) அர்ரீனோடோகி (Arrhenotoky) :
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எ.கா தேனீக்கள்
ஆ) தெலிடோகி (Thelytoky) :
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எ.கா.சொலனோபியா
இ) ஆம்ஃபிடோகி (Amphitoky) :

- ‘இளம் உயிரிநிலை’ / ‘வளராக்க நிலை’ (Juvenile Phase/Vegetative Phase),
- ‘இனப்பெருக்க நிலை’ / ‘முதிர்ச்சி நிலை’ (Reproductive Phase/Maturity Phase)
- முதுமை நிலை (Senescent Phase).
ஒரு உயிரியின் பிறப்பிற்கும் இனப்பெருக்க முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட வளர்ச்சிக்காலம் ‘இளம் உயிரி நிலை’ எனப்படும்.
இனப்பெருக்க நிலை
ஒரு உயிரியானது இனப்பெருக்கம் செய்து வழித் தோன்றல்களை உருவாக்கும் செயல்களைச் செய்யும் காலம் இனப்பெருக்க நிலை ஆகும்.
இனச்சேர்க்கையுறும் காலத்தைப் பொறுத்து விலங்குகள் இரு வகையாகப் பிரிக்கப்படும். அவை,
- ‘பருவகால இனச்சேர்க்கையாளர்கள்’ (Seasonal breeders)
- ‘தொடர்ச்சியான இனச்சேர்க்கையாளர்கள்’ (Continuous breeders).
பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ‘தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள்’ ஆகும். எ.கா: தேனீக்கள், வளர்ப்புப் பறவைகள், முயல்கள் போன்றவை.
இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் ஒரு உயிரியின் உடல்டல் அமைப்பிலும் செயல்பாடுகளிலும் சிதைவு ஏற்படத் தொடங்கும் நிலை முதுமை நிலை (Senescent phase) எனப்படும்.
கன்னி இனப்பெருக்கம் (Parthenogenesis)
(Gr. Parthenos – virgin, Genesis – produce) அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு ‘கன்னி இனப்பெருக்கம்’ என்று பெயர். இது, 1745ல் சார்லஸ் பானட் என்பவரால் முதன் முதலில் கண்டறிப்பட்டது. கன்னி இனப்பெருக்கம் இருவகைப்படும்.
அவை,
- இயற்கையான கன்னி இனப்பெருக்கம் (Natural parthenogenesis)
- செயற்கையானக் கன்னி இனப்பெருக்கம் (Artificial Parthenogenesis).
இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, ‘முழுமையான’ (Complete) மற்றும் ‘முழுமையற்ற’ (Incomplete) கன்னி இனப்பெருக்கம் ஆகும்.
சில விலங்குகளில், இரு பெற்றோர்களால் நிகழும் பாலினப் பெருக்கம் நடைபெறுவதில்லை. மாறாக, அவை முழுமையான கன்னி இனப்பெருக்கம் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்விலங்குகளில் ஆண் உயிரிகளே காணப்படுவதில்லை. பெண் உயிரிகள் மட்டுமே உள்ளன. முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் நடைபெறும் சில விலங்குகளில், பாலினப் பெருக்கம் மற்றும் கன்னி இனப்பெருக்கம் இரண்டுமே நடைபெறுகின்றன. எ.கா: தேனீக்களில், கருவுற்ற முட்டை இராணித் தேனீயாகவும் வேலைக்காரத் தேனீக்களாகவும் வளர்ச்சியுறுகின்றன. அதே வேளையில், கருவுறாத முட்டைகள் ஆண் தேனீக்களாக வளர்ச்சியடைகின்றன.
‘இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில்’ (Paedogenetic parthenogenesis/Paedogenesis) இளவுயிரியே (larvae) கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்குகிறது. கல்லீரல் புழுவின் ஸ்போரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள் இவ்வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களிலும் இது நடைபெறுகிறது. எ.கா. மொழுக்கு ஈ (Gall fly).
செயற்கை கன்னி இனப்பெருக்கத்தில் கருவுறாத அண்டம் இயற்பிய அல்லது வேதிய தூண்டல்கள் மூலம் தூண்டப்பட்டு முழு உயிரியாக வளர்ச்சியடைகின்றன. எ.கா: வளை தசை புழுக்கள் மற்றும் கடல் அர்ச்சின்.
உங்களுக்கு தெரியுமா?
இயற்கையான கன்னி இனப்பெருக்கம் பல வகைப்படும்.
அ) அர்ரீனோடோகி (Arrhenotoky) :
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எ.கா தேனீக்கள்
ஆ) தெலிடோகி (Thelytoky) :
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் பெண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எ.கா.சொலனோபியா
இ) ஆம்ஃபிடோகி (Amphitoky) :
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில் அண்ட செல் வளர்ச்சியுற்று ஆண் அல்லது பெண் உயிரியாக உருவாகின்றது. எ.கா. ஏஃபிஸ்
விலங்குகள் கரு வளரும் இடம் மற்றும் இவ்விலங்கு (கருவுற்ற/கருவுறாத) முட்டையிடுகிறதா அல்லது குட்டி ஈனுகிறதா என்பதைப் பொறுத்து மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
முட்டையிடுபவை (Oviparous)
- முட்டையிடுவன (Oviparous),
- குட்டி ஈனுபவை (Viviparous) மற்றும்
- தாயுள் முட்டைபொரித்து குட்டி ஈனுபவை (Ovoviviparous) ஆகியன.
முட்டையிடுபவை (Oviparous)
முட்டையிடுபவை (oviparous.L., ovum - egg; parere - to produce) (படம் 1.14) என அழைக்கப்படும் விலங்குகளில், தாயின் உடலிலிருந்து வெளியே இடப்பட்ட முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவருகின்றன. எ.கா. ஊர்வன மற்றும் பறவைகள் (இவற்றின் முட்டைகள் சுண்ணாம்பினால் ஆன கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளன) முதுகெலும்பற்றவை, மீன்கள், இருவாழ்விகள் (இவற்றின் முட்டைகள் ஓட்டினால் மூடப்படவில்லை, மாறாக அவற்றின் முட்டைகள் ஒரு சவ்வினால் மூடப்பட்டுள்ளன)
குட்டி ஈனுபவை (Viviparous)
இளம் குட்டிகளை பிரசவிக்கும் விலங்குகள் குட்டி ஈனுபவை (viviparous – L.vivus-alive; parereto produce) எனப்படும். (படம் 1.15) தாய் சேய் இணைப்புத் திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியாக உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி குட்டி ஈனுதல் (Viviparity) எனப்படும். மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகள் குட்டி ஈனுபவை ஆகும்.
இளம் குட்டிகளை பிரசவிக்கும் விலங்குகள் குட்டி ஈனுபவை (viviparous – L.vivus-alive; parereto produce) எனப்படும். (படம் 1.15) தாய் சேய் இணைப்புத் திசு மூலம் உணவூட்டம் பெற்று கருப்பையினுள் வளர்ச்சியடைந்து முழு உயிரியாக உயிருடன் பிறக்கும் நிகழ்ச்சி குட்டி ஈனுதல் (Viviparity) எனப்படும். மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகள் குட்டி ஈனுபவை ஆகும்.
தாயுள் முட்டைபொரித்து குட்டி ஈனுபவை (Ovoviviparous)
தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் (ovoviviparous) விலங்குகளில் கருவானது முட்டைக்குள்ளேயே வளர்ச்சி அடைந்து பொரிந்து வெளியேறும் வரை தாயின் உடலுக்குள்ளேயே உள்ளது. (படம் 1.16) இவ்வகை இனப்பெருக்கம் குட்டி ஈனும் வகை போன்று தெரிந்தாலும் கருவுக்கும் தாய்க்கும் இடையில் தாய் சேய் இணைப்புத் திசு காணப்படுவதில்லை. கருவானது முட்டையின் கரு உணவுப் பையிலிருந்தே உணவூட்டம் பெறுகிறது. தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் பண்பு சுறாமீன் போன்றவைகளில் காணப்படுகிறது.
தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் (ovoviviparous) விலங்குகளில் கருவானது முட்டைக்குள்ளேயே வளர்ச்சி அடைந்து பொரிந்து வெளியேறும் வரை தாயின் உடலுக்குள்ளேயே உள்ளது. (படம் 1.16) இவ்வகை இனப்பெருக்கம் குட்டி ஈனும் வகை போன்று தெரிந்தாலும் கருவுக்கும் தாய்க்கும் இடையில் தாய் சேய் இணைப்புத் திசு காணப்படுவதில்லை. கருவானது முட்டையின் கரு உணவுப் பையிலிருந்தே உணவூட்டம் பெறுகிறது. தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் பண்பு சுறாமீன் போன்றவைகளில் காணப்படுகிறது.
குட்டி ஈனும் வகையான எலுமிச்சை சுறா குட்டி ஈனுதல் - தாய் சேய் இணைப்புத் திசுவினால் தாயுடன் இணைக்கப்பட்ட நிலையில் இளம் சுறா.
பாடச்சுருக்கம்
உயிரிகள் தங்களைப்போன்றே மற்றொரு உயிரியை உருவாக்கும் இனவிருத்தி நிகழ்ச்சி இனப்பெருக்கம் ஆகும். பாலிலி இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம் என இனப்பெருக்கத்தை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம். இனச்செல்கள் உருவாக்கம் மற்றும் அவை இணைதல் போன்ற நிகழ்ச்சிகள் பாலினப்பெருக்கத்தில் மட்டுமே நடைபெறுகிறது. பாலிலா இனப்பெருக்கத்தில் இவ்விதம் நிகழ்வதில்லை . பிளவுறுதல், முகிழ்த்தல், துண்டாதல், இழப்பு மீட்டல் போன்ற முறைகளில் பாலிலா இனப்பெருக்கம் நிகழ்கிறது. பிளவுறுதல் நிகழ்ச்சியானது இரு சமப்பிளவுமுறை, பல பிளவுமுறை, ஸ்போர் உருவாக்கம், ஸ்ட்ரோபிலா உருவாக்கம் போன்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பிளவுறுதல் நடைபெறும் தளத்தைப் பொறுத்து பல வகையான இரு பிளவுறுதல் காணப்படுகிறது. அவையாவன, எளிய ஒழுங்கற்ற இருசமப்பிளவுமுறைகிடைமட்ட இரு சம்பிளவு முறை, நீளவாட்டு இரு சமபிளவு முறை மற்றும் சாய்வு மட்ட இரு சமப்பிளவு முறை. பல பிளவு முறை என்பது தாய் செல்லானது ஒரே நேரத்தில் பல சிறிய சேய் செல்களாகப் பிரியும் நிகழ்ச்சியாகும். பாலிலி இனப்பெருக்கத்தின் மற்றொரு முறை முகிழ்த்தல் ஆகும். பெற்றோரின் உடலத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொட்டுகள் தோன்றி ஒவ்வொரு மொட்டும் ஒரு இளம் உயிரியாக வளர்ச்சியடைந்து பின்பு உடலத்தில் இருந்து தனித்துப் பிரிந்து இயல்பான வாழ்க்கையை மேற்கொள்கின்றன.
பெற்றோர் உடலத்தின் மேற்பரப்பில் பல மொட்டுகள் தோன்றினால் அது 'புற முகிழ்த்தல்' என்றும் பெற்றோர் உடல் செல்களின் சைட்டோபிளாசத்தில் பல மொட்டுகள் தோன்றினால் அது 'அக முகிழ்த்தல்' என்றும் அழைக்கப்படும். 'துண்டாதல்' என்பது மற்றொரு வகையான பாலிலி இனப்பெருக்கம் ஆகும். இதில் பெற்றோர் உடலானது பல துண்டுகளாக உடைகிறது. இவ்வாறு உருவான ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய உயிரியை உருவாக்கும் திறனைப் பெற்றுள்ளது. இழப்பு மீட்டல் என்பது ஒரு சிறு துண்டிலிருந்து முழுமையான உயிரியை உருவாக்கும் நிகழ்வாகும்.
இது, சீராக்கல் வகை இழப்பு மீட்டல் மற்றும் மீண்டும் உருவாக்குதல் வகை இழப்பு மீட்டல் என இரு வகைப்படும். விலங்குகளில் பல வகையான பாலினப்பெருக்க முறைகள் காணப்படுகின்றன. ஒருங்கிணைவு முறையில் இரண்டு ஒற்றைமய இனச்செல்கள் ஒன்றிணைந்து ஒரு கருமுட்டை உருவாக்கப்படுகிறது. விலங்குகளில் கீழ்க்காணும் பல வகையான ஒருங்கிணைவு முறைகள் நடைபெறுகின்றன.
அவை தன் கருவுறுதல், அயல் கருவுறுதல், முழுச்சேர்க்கை , இளம் செல்சேர்க்கை, மாறுபட்ட செல் சேர்க்கை, ஒத்த செல்சேர்க்கை, வேறுபட்ட செல் சேர்க்கை மற்றும் இணைவு முறை இனப்பெருக்கம் ஆகியவை ஆகும். கன்னி இனப்பெருக்கம் என்பது விலங்குகளில் காணப்படும் சிறப்பு வகையான இனப்பெருக்க முறை ஆகும். இது இயற்கையான கன்னி இனப்பெருக்கம் மற்றும் செயற்கையான கன்னி இனப்பெருக்கம் என இருவகைப்படும்.
கரு வளர் முறையைப் பொறுத்து விலங்குகள் முட்டை இடுபவையாகவோ, குட்டி ஈனுபவையாகவோ மற்றும் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனுபவையாகவோ இருக்கலாம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||