சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேரு வதற்காக மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயர்நிலை அதிகாரிகளாய் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக இளம் வயதிலிருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால் 1961-இல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன.
இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்பில் சேருவதற்காக மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு அக்.31-ஆம் தேதியுடன் முடித்திருந்த நிலையில், மீண்டும் விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு வரும் ஜனவரி 5, 2020-இல் நடைபெற உள்ளது. மாணவிகள் 6-ஆம் வகுப்பில் சேர, 10-இல் இருந்து 12வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ஆம் வகுப்பில் சேர 13-இல் இருந்து 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டவயது மார்ச் 31,2020வரை பொருந்தும். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற பொதுப் பிரிவினர் ரூ.400 எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, இணையதளத்தில் www.sainischooladmission.in என்ற முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் மட்டுமே படித்து வந்த சைனிக் ராணுவப்பள்ளியில், 2018-ஆம் கல்வியாண்டில் இருந்து மாணவிகளும் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய கல்விச்செய்திகள் |
வேலை வாய்ப்பு செய்திகள் |
LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
KALVISOLAI - WHAT'S APP GROUP |
KALVISOLAI - TELEGRAM GROUP |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||