TN GOVT D.A HIKE 5% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி யானது 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த் தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தை கணக் கிட்டு ஆண்டுதோறும் 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடந்த ஜூலை 1-ம் தேதியைக் கணக்கிட்டு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணை: மாநில அரசு அலுவலர்களுக்கு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அடிப்படை ஊதியத்தில் முந் தைய ஆண்டு 9 சதவீதமாக இருந்த அகவிலைப் படியை 3 சதவீதம் உயர்த்தி, 12 சதவீதமாக மே மாதம் 20-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு 5 சதவீதம் உயர்த்தியதை அடுத்து, அந்த ஆணையைப் பின்பற்றி, ஜூலை 1-ம் தேதியில் இருந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி 17 சதவீதமாக அகவிலைப்படி வழங்கப்படும்.
மேலும், ஜூலை முதல் செப்டம்பர் வரை யிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை, தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனையின்படி வழங்கப்படும். தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி முழுநேர பணி யாளர்கள், முழுநேர அலுவலர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
குறிப்பாக, அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர் கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந் திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள விகிதங் களில் வரும் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொருந்தும்.
மேலும், தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு, மாதம் ரூ.2 ஆயிரத்து 500 வரை ஊதியம் பெற் றால் ரூ.50-ம், அதற்கு மேல் ஊதியம் பெற்றால் ரூ.100-ம் இடைக்கால ஊதிய உயர்வாக கடந்த ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||