கணினி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச், ஜூன் மாதம் தேர்வு நடத்தியது. இந்த தேர்வு தொடர்பான அறிவிப்பில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழ் மொழியில் தேர்வு நடத்தப்படாமல் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் தயானா உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். அதில், தமிழில் தேர்வு நடத்தாததால், இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், ‘தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்ட நுழைவுச்சீட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. முதுகலை படிப்பு வரை தமிழ் வழியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வை நடத்த வாய்ப்புகள் இருந்தும், ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழில் இத்தேர்வை நடத்தாமல் புறக்கணித்துள்ளது’ என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘கணினி ஆசிரியர் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்படும் தருவாயில் உள்ளது. மனுதாரர்கள் தற்போது தமிழில் தேர்வை நடத்தவில்லை எனக்கூறி வழக்கு தொடர்ந்துள்ளது ஏற்புடையதல்ல. இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மறுஉத்தரவு பிறப்பிக்கும்வரை கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||