நடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட மற்றொரு அரசாணை:
மாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட மொழிப்பாடத் தேர்வுகள் 2 தாள்களாக (தாள்-1, தாள்-2) இல்லாமல் ஒரே தாளாக மாற்றப்பட்டது. அதேபோல், பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறையை பின்பற்ற ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதையேற்று நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வுத்துறைக்கான கூடுதல் வேலைகள் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வுத்துறைக்கான கூடுதல் வேலைகள் தவிர்க்கப்படும்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||