மத்திய அரசு விலக்கு அளிக்காவிட்டால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால், நீட் தேர்வு தொடர்பான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு தமிழகத்தில் ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நாடுமுழுவதும் ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. நீட் தேர்வு தொடர்பான தேவையான திருத்தங்களை இந்திய மருத்துவ முறை குழுமம் செய்துவிட்டது.
மாணவர்கள் குழப்பம்
நாடுமுழுவதும் கடந்த 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஆனால், இதுவரை தமிழகத்தில் இந்த ஆண்டு ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் மூலம் நடைபெறுமா அல்லது பிளஸ்2 மதிப்பெண்ணின் அடிப்படையில் நடைபெறுமா என்பதை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இதனால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி யுள்ளது.
விலக்கு கிடைக்கவில்லை என்றால், மத்திய அரசின் முடி வான நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆயுஷ் படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்றனர்.
அனைத்து கல்விச்செய்திகளும் ஒரே இடத்தில்... |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்செய்தி |
வேலை-1 || வேலை-2 |
புதிய செய்தி |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||