COURT RECRUITMENT 2019 |
COURT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 180 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 12-6-2019.
இணைய முகவரி : www.mhc.tn.gov.in
தமிழகத்தில் உயர்நீதிமன்றங்கள் (ஐகோர்ட்டு) சென்னை மற்றும் மதுரையில் செயல்படுகிறது. தற்போது சென்னையில் செயல்படும் மெட்ராஸ் ஐகோர்ட்டு நீதிமன்றத்தில் ரெசிடென்சியல் அசிஸ்டெண்ட் (வீட்டு உதவியாளர்) பணிகளுக்கு நேரடி தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்ய, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பணிக்கு, இந்த அழைப்பின் மூலம் 180 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். தேர்வாளர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களின் வீடுகளில் பணியமர்த்தப்படுவார்கள். சமைத்தல், வீடு பராமரிப்பு போன்ற வேலைகள், தேர்வாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இவர்கள் சென்னை நீதிமன்றத்திலோ அல்லது மதுரை உயர்நீதிமன்ற கிளையிலோ பணிநியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பொது பிரிவு விண்ணப்பதாரர்கள், 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். மற்ற பிரிவினருக்கு, வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகின்றன. பொது பிரிவினர், ஓ.பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் டி.டி.யாக இணைக்கப் பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ), எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 12-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||