வனத்துறையில் காலியாக உள்ள564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வனத்துறை நேற்று வெளியிட்டுள்ளது.
வனத்துறையில் பல்வேறு நிலையிலான பணியிடங்கள் காலியாக உள்ளன. அதன் காரணமாக வனப் பாதுகாப்பில் பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தன. கடந்த ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த 23 பேர்உயிரிழந்ததற்கு, ஊழியர்கள் பற்றாக்குறையும் ஒரு காரணம்என, அந்த தீவிபத்து தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன்பு, 785 வன காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணி ஆணையை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் வனத்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இப்பணிகளுக்கு www.forests.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக மே முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் முறையில் ஆண், பெண், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையவழித் தேர்வு ஜூன் 4-வது வாரத்தில் நடைபெறும். 21 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட, 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்செய்தி |
வேலை-1 || வேலை-2 |
புதிய செய்தி |
பொது அறிவு |
KALVISOLAI - SITE MAP |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||