பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நிரப்ப உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி விரைவில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உடற்கல்வி ஆசிரிய-ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழக அரசின் தணிக்கைத்துறை, நிதித்துறையின் ஆலோசனையின்படிதான் இந்த நியமனம் நடந்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் தமிழக அரசு உரிய பதில் அளிக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
READ MORE NEWS |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் |
இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||