PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 –தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provisional Mark Certificate) விநியோகித்தல் | மார்ச் 2015–ஆம் ஆண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டபின், தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தேர்வர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை கல்லூரிச் சேர்க்கைக்கும் மற்றும் அவசரத்தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பள்ளிக்கு விநியோகிக்கப்படும். அதன்படி, 16.05.2018 அன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிட்ட பின்னர், 18.05.2018 பிற்பகல் முதல் www.peps.tn.nic.in மற்றும் www.peps.nic.in ஆகிய இரு இணையதள முகவரிகளிலிருந்து அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர் தம் பள்ளித் தேர்வர்களுக்கும், தனித்தேர்வர் தேர்வுமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் தமது மையத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தங்களுக்குப் வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு பதிவிறக்கம் செய்து அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்படி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 21.05.2018 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தேர்வர்கள்/தனித் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள்/தனித்தேர்வர் தேர்வு மையம் மூலமாக விநியோகம் செய்யப்படவேண்டும். மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மட்டுமே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்ய வேண்டும். பள்ளித் தேர்வர்கள் / தனித்தேர்வர்கள் தேவைப்படின் அவரவர்களே நேரடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து 21.05.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
CLICK HERE FOR +2 RESULT |
STUDY MATERIALS DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||