PLUS TWO EXAM MARCH 2018 COPY OF THE ANSWER SCRIPT | RE TOTALLING DETAILS - விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17.05.2018 (வியாழக்கிழமை) முதல் 19.05.2018 (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் : பகுதி – 1 மொழி - ரூ.550/- பகுதி – 2 மொழி (ஆங்கிலம்) - ரூ.550/- ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/- மறுகூட்டல் கட்டணம் பகுதி – 1மொழி, பகுதி – 2மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் - ரூ.305/- (இரு தாட்கள் சேர்த்து) ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/- பணம் செலுத்தும் முறை : விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் – இணையதளத்தில் பதிவிறக்கம் செய்கொள்ளும் முறை : விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.
CLICK HERE FOR +2 RESULT |
STUDY MATERIALS DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||