தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு அமல் சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகளின்போது ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை ஒழிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் மாணவர்களுக்கு தெரிவிக்கும் வசதியும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தரமாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் தொடர்பாக 24,731 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது மொழிப் பாடங்களில் (தமிழ், ஆங்கிலம்) தாள்-1, தாள்-2 என்றிருப்பதை ஒரே தாளாக மாற்றும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. சென்னை டிபிஐ வளாகத்தில் ரூ.39 கோடி செலவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அடுக்குமாடிக் கட்டிடம் ....
ALL EDU AND EMP NEWS |
STUDY MATERIALS DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||