பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் தோறும் முதன்மைகல்வி அலுவலர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு பள்ளிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த அடிப்படையில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத அரசு, தனியார், மழலையர் பள்ளி, சி.பி.எஸ்.இ. , ஐ.சி.எஸ்.இ. பள்ளியிலும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கும் சொந்த நிலம், போதுமான ஆசிரியர்கள், தீத்தடுப்பு சாதனங்கள் போன்றவை இருக்க வேண்டும். இவற்றை பின்பற்றாத பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி 10-ம் மற்றும் 12-ம் பொதுத்தேர்வு முடிவடைந்தவுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ALL OTHER NEWS |
STUDY MATERIALS DOWNLOAD |
ALL QUESTION PAPERS DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||