
சிவில் நீதிபதி பதவிக்கு ஜூன் 9-ல் எழுத்துத்தேர்வு
தமிழ்நாடு நீதித்துறை பணியில் 320 சிவில் நீதிபதி காலியிடங்களை நிரப்புவதற்கு ஜூன் மாதம் 9-ம் தேதி முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
இத்தேர்வுக்கு சட்ட பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி மே மாதம் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக் கலாம்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக முதன்மைத்தேர்வு நடத்தப்படும். மொத்தம் 4 தாள்களை உள்ளடக்கிய இத்தேர்வு, ஆகஸ்ட் 11, 12-ம் தேதிகளில் காலையும் பிற்பகலும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||