TNPSC தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2014 – 2016 - இல் அடங்கிய நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியான நபர்களை தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 30.04.2015-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 21.08.2016 அன்று நடைபெற்றது. நேர்காணல் 22.01.2018 முதல் 19.02.2018 வரை நடைபெற்றது. அதன்பின்னர் 1094 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு முதற்கட்ட கலந்தாய்வு 19.03.2018 முதல் 03.04.2018 வரை நடைபெற்றது.
முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் நிரப்பப்படாமல் எஞ்சியுள்ள 88 காலிப்பணியிடங்களில் 45 பதவிகளுக்கு மட்டும் தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25.04.2018 ல் நடத்த தேர்வணையம் முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு 1:5 என்ற விகிதாச்சாரத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள்முறையே அழைப்புக்கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்புக்குறிப்பாணையினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்கலந்தாய்விற்கு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.
இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டவர்களை தவிர ஏற்கனவே முதல்கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு அடிப்படை சம்பளவிகிதம் 9300/- ல் ஏதேனும் ஒரு பதவியை தேர்வு செய்திருந்து தற்போது இடம் பெற்றுள்ள பதவி காலியிடங்களில் ஏதேனும் ஒன்றை தெரிந்தெடுக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் பங்குகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தரவரிசை மற்றும் பதவிகளுக்கான கல்வித்தகுதி காலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். 1:5விகிதாச்சாரத்தில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளமையால் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் தெரிவு பெறும் வாய்ப்பு இல்லை என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் /
செயலாளர் (பொ)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
ALL OTHER NEWS |
STUDY MATERIALS DOWNLOAD |
ALL QUESTION PAPERS DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||