Home »
EMPLOYMENT UPDATES
» காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்
காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்
துறை தலைவர்களே முடிவு செய்யலாம் | தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை.
“தற்போதைய நடைமுறையில், ஆசிரியர் காலியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடம் ஒப்புதல் பெற்று அதை இறுதிசெய்வதற்கு அதிக காலம் ஆகிவிடுகிறது. அரசின் புதிய முறை மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பமுடியும்” என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||