பேங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பணி | மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி செக்ரட்டரிஷிப், ஐ.சி.டபிள்யு.ஏ. முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். வயது குறைந்தபட்சம் 21 ஆகவும் அதிகபட்சம் 30 ஆகவும் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். என்ன கேட்பார்கள்? எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தெரிவுசெய்யப்படுவர். ஆன்லைன்வழியிலான எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், வங்கித் துறை சம்பந்தப்பட்ட பொது அறிவு, நிதி மேலாண்மை ஆகிய 3 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் இடம்பெறும். இதற்கு மதிப்பெண் 150. தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். ஆங்கிலப் பிரிவில், நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றாலே போதும். அதில் எடுக்கும் மதிப்பெண் மெரிட் பட்டியலுக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதற்கு 100 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற விகிதாச்சாரத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயதும் உடைய பட்டதாரிகள் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.bankofindia.co.in ) பயன்படுத்தி மே 5-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
ALL OTHER NEWS |
STUDY MATERIALS DOWNLOAD |
ALL QUESTION PAPERS DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||