
பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை முடிவடைகிறது 9-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளில் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி-வேதியியல், சிறப்புத்தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. மே 16-ல் முடிவு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியிடப்படும். மார்ச் 7-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 18-ம் தேதியும், மார்ச் 16-ல் தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வருகிற 20-ம் தேதியும் நிறைவடைகின்றன. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||