சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள மேலாளர் தரத்திலான 145 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மே 2க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 145
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Specialist Officers
துறை: Information Technology Department / Digital Banking Department
1. Assistant General Manager - 01
2. Chief Manager - 09
3. Manager -13
4. Senior Manager -08
துறை: Information Systems Security Cell
1. Assistant Manager - 01
2. Manager - 05
3. Senior Manager - 01
துறை: Treasury Department
1. Manager - 02
2. Senior Manager - 11
துறை: Treasury Department
1. Manager - 04
2. Senior Manager - 03
துறை: Security Department
1. Manager - 55
2. Senior Manager - 20
துறை: Planning and Development Department
1. Manager - 01
2. Assistant Manager - 01
துறை: Premises and Expenditure Department
1. Manager - 04
2. Assistant Manager - 07
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 66,070
தகுதி: கணினி அறிவியல், கணினி அப்ளிகேசன், ஐடி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன்ஸ், எல்க்ட்ரானிக்ஸ் இன்ஸ்ருமென்டேசன் போன்ற துறைகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முதுநிலை பொறியியல் தொழில்நுட்பம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 20 முதல் 38க்குள் இருக்க வேண்டும். 45 வயதுடையவர்களுக்கு பணி உள்ளது. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மிகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பித்திருந்தால் முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அடுத்தகட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/SOENG.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||