அசத்தல் அரங்கம் 2017 | தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வமிக்க ஆசிரியர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பானது தரமான கல்வி ஒன்றை இலக்காக கொண்டு ஆசிரியர்களை வளப்படுத்தும்,வலுப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பு செய்து வருகின்றது. திறன்வாய்ந்த ஆசிரியர்களின் சங்கமமாக இது திகழ்கிறது. உலக அளவில் எழுத்தறிவின்மையைப் போக்கவும், நல்ல கல்வியை வழங்கவும் ரோட்டரி அமைப்பானது திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது. அதனை ரோட்டரி மாவட்டம் 3000 ல் ஜம்புகேஸ்வரம் ரோட்டரி கிளப் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது. இந்த இரு அமைப்புகளும் இணைந்து தமிழக அளவில் தமது கல்விப்பணிகளால் பெரும் மாற்றத்தை விளைவித்த ஆசிரியர்களை அடையாளப்படுத்தும் வகையிலும், அங்கீகரிக்கும் வகையிலும் *மாற்றங்களை உருவாக்குவோம்* என்னும் தலைப்பில் *சமூகச் சிற்பிகள்* என்னும் தலைப்பில் தமிழகத்தின் சிறந்த ஆசிரியர்கள் 55 பேருக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்னும் தலைப்பில் தமிழகத்தை தன்பக்கம் ஈர்த்த சாதனை மாணவர்கள் 6 பேர் கல்விக்காவலர்கள் என்னும் தமிழக அளவில் 6 தன்னார்வ அமைப்புகளுக்கும் விருது வழங்கும் விழாவை கல்வியாளர்கள் சங்கமமும் ஜம்புகேஸ்வரம் ரோட்டரி கிளப்பும் அசத்தல் அரங்கம் 2017 என்னும் நிகழ்வை திருச்சியில் நடத்தின.
இவ்விழாவில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில இணை இயக்குனர் பொன்னையா, கிழக்கு பதிப்பக நிறுவனர் பத்ரி சேஷாத்ரி, கவிஞர் தங்கம் மூர்த்தி, எம்.ஏ.எம் குழுமங்களின் இயக்குனர் மாலுக் முகமது ஆகியோர் விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர். விழாவில் பேசிய இணை இயக்குனர் கல்வியாளர்கள் சங்கமத்தின் மாற்றங்களை உருவாக்குவோம் நிகழ்வு மூலம் ஆசிரியர்களது பணியை தமிழகம் முழுக்க அடையாளப்படுத்தவும், இன்னும் இவர்களைப் போல பிற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவும் முடியும். மேலும் தன்னார்வ அமைப்புகளை ஊக்கப்படுத்துவதன் மூலம் இன்னும் கூடுதலாக பள்ளிகள் நன்மை அடைய வாய்ப்பு ஏற்படவும் அடித்தளமாக இந்த மாற்றங்களை உருவாக்குவோம் நிகழ்வு அமையும் எனக் குறிப்பிட்டு பேசினார். இந்நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள்,தன்னார்வ அமைப்புகள் மற்றும் கல்வித்துறை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்விற்கு ரோட்டரி தலைவர் சங்கர் தலைமை வகித்தார். நிகழ்வின் நோக்கம் மற்றும் இலக்குகள் குறித்து கல்வியாளர்கள் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் விரிவாகப் பேசினார். விழாவின் முடிவில் எழுத்தறிவு திட்ட தலைவர் பரஞ்சபை நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் அப்பாஸ் மந்திரி தலைமையில் ஜம்புகேஸ்வரம் ரோட்டரி செய்திருந்தது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||