
தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் சேர 5 வருட சட்ட படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு கலந்தாய்வு அடுத்த மாதம் 2-ந் தேதி தொடங்குகிறது | தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் சேர, 5 வருட சட்ட படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. கலந்தாய்வு அடுத்த மாதம்(ஆகஸ்டு) 2-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் 10 அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 5 வருட சட்டப்படிப்பில் (பி.ஏ.,எல்.எல்.பி.) சேர 1,374 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 9 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், நேற்று அந்த பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் ( www.tndalu.ac.in ) வெளியிடப்பட்டது. இந்த படிப்புக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அன்று பொதுப்பிரிவினருக்கும், பழங்குடியினருக்கும் நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கு கட் ஆப் மதிப்பெண் 93.625 ஆகும். பழங்குடியினருக்கு கட் ஆப் மதிப்பெண் 78.875 ஆகும். 3-ந் தேதி காலை 10 மணிக்கு அருந்ததியருக்கும், பிற ஆதி திராவிடர்களுக்கும் காலை 11 மணிக்கும் கலந்தாய்வு நடக்கிறது. அருந்ததியருக்கு கட் ஆப் மதிப்பெண் 82.375 ஆகும். பிற ஆதிதிராவிடர்களுக்கு கட் ஆப் மதிப்பெண் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு 4-ந் தேதி காலை 9 மணிக்கும், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்களுக்கு அன்று பிற்பகல் 2 மணிக்கும் கலந்தாய்வு நடக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கட் ஆப் மதிப்பெண் 85.875 ஆகும். முஸ்லிம்களுக்கு கட் ஆப் மதிப்பெண் 83.125 ஆகும். 5-ந் தேதி காலை 9 மணிக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு கட் ஆப் மதிப்பெண் 86.750 ஆகும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் மூத்தவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும். தொழில் கல்வி மாணவர்களுக்கு கட் ஆப் மதிப்பெண் 94.125 ஆகும். கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம், சம்பந்தப்பட்டவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அப்படி அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், கட் ஆப் மதிப்பெண் வரையறைக்குள் வந்திருந்தால் அவர்களும் உரிய நாளில், கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||