பழைய ஓய்வூதியத் திட்ட ஆய்வுக்கான நிபுணர் குழுவின் காலம் மேலும் நீட்டிப்பு அரசாணை வெளியீடு | 2003-ம் ஆண்டுக்கு மேல் தமிழக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுபற்றி நிபுணர் குழு அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
அதன்படி, தமிழக அரசு தற்போது அமைத்துள்ள நிபுணர் குழுவின் தலைவராக, முதல்-அமைச்சரின் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்த ஷீலா நாயர், உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளி பேராசிரியர் பிரிஜேஷ் சி.புரோகித், உறுப்பினர் செயலாளராக திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த செப்டம்பர் 15, 16 மற்றும் 22-ந் தேதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சங்கங்களை இந்தக் குழு அழைத்து கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. இந்த நிலையில் நிபுணர் குழுவின் காலம் செப்டம்பர் 26-ந் தேதியோடு நிறைவடைந்தது. இந்தநிலையில் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் வகையில் நிபுணர் குழுவின் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி டிசம்பர் 26-ந் தேதி வரை நிபுணர் குழு செயல்படும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||