தமிழகத்தில், தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பி.எட்., - எம்.எட்., கல்லூரிகள் இருப்பதால், புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம்'' என, என்.சி.டி.இ., அமைப்பை, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, தமிழகம் உட்பட 15 மாநிலங்களில், ஆசிரியர் கல்வி படிப்பிற்கு புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது என, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது.இது குறித்து, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:வரும், 2012 - 13ம் கல்வியாண்டில், புதிதாக ஆசிரியர் கல்வி படிப்புகளை துவங்க திட்டமிட்டுள்ள நிறுவனங்கள், அங்கீகாரம் கேட்டு, ஆக., 1ம் தேதியிலிருந்து
30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிங் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இதற்கிடையே, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் தேவைகள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அது குறித்த விவரங்களை என்.சி.டி.இ., திரட்டியுள்ளது. பல மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருப்பதாகவும், எனவே புதிதாக ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.அதன்படி, ஆந்திரா, குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிய கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது. மேலும், ஏற்கனவே இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில், கூடுதல் இடங்கள் அனுமதியும் வழங்கப்பட மாட்டாது.
இந்த கட்டுப்பாடுகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. என்.சி.டி.இ., எடுத்துள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானது தான்.இவ்வாறு என்.சி.டி.இ., அறிவித்துள்ளது.தடை விதிக்கப்பட்ட மாநிலங்கள்30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிங் மண்டல அலுவலகங்களில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இதற்கிடையே, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் தேவைகள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அது குறித்த விவரங்களை என்.சி.டி.இ., திரட்டியுள்ளது. பல மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருப்பதாகவும், எனவே புதிதாக ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.அதன்படி, ஆந்திரா, குஜராத், அரியானா, இமாச்சலபிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிய கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது. மேலும், ஏற்கனவே இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில், கூடுதல் இடங்கள் அனுமதியும் வழங்கப்பட மாட்டாது.
1. ஆந்திரா2. டாமன் - டையூ3. குஜராத்4. அரியானா5. இமாச்சலபிரதேசம்6. கர்நாடகா7. கேரளா8. மத்தியப்பிரதேசம்9. மகாராஷ்டிரா10. புதுச்சேரி11. பஞ்சாப்12. ராஜஸ்தான்13. தமிழ்நாடு14. உத்தரப்பிரதேசம்15. உத்தரகண்ட்
private teacher training school should be closed
ReplyDeleteGood decision.
ReplyDeletenice ji
ReplyDeleteAll private colleges shuld be close
ReplyDeleteVery wellVery well
ReplyDeleteGood Decision!
ReplyDelete