பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பாடங்களை மீண்டும் தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் எச் வகை விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் ஒரு பாடத்துக்கு தேர்வு கட்டணமாக ரூ. 50-ம் இதரக்கட்டணமாக ரூ. 35-ம் செலுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளியும் 1.9.2011 அன்று பதினாறரை வயது பூர்த்தி அடைந்தவர்களும் பிளஸ் 2 நேரடி தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். இவர்கள் எச்.பி. வகை விண்ணப்பத்தினை பயன்படுத்த வேண்டும். இவர்கள் தேர்வுக் கட்டணமாக ஒரு
பாடத்துக்கு ரூ. 150, இதரக் கட்டணம் ரூ. 35, கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ. 2 என மொத்தம் ரூ. 187 செலுத்த வேண்டும். சென்னை மாவட்ட தனித் தேர்வர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கேட்புக் காசோலை அல்லது வங்கிக் காசோலே மூலமாக "அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை - 600 006' என்ற பெயரில் எடுக்க வேண்டும். மற்ற மாவட்ட மாணவர்கள் அரசுக் கருவூலங்களில் கருவூலச்சீட்டு மூலமாக மட்டும் செலுத்த வேண்டும். தொழில்கல்விப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், மார்ச் 2011 மற்றும் அதற்கு முந்தைய பருவங்களில், தொழில்கல்வி பாடங்களில் தோல்வியுற்றோர், பழைய பாடத் திட்டத்தின்படி தேர்வெழுத செப். 2011, மார்ச் 2012 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதன் முதலாக தேர்வு எழுதுபவர்கள் 2005-2006-ம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பாடத் திட்டத்தின்படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பப் படிவங்களை ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 12 வரை அலுவலகப் பணி நாள்களில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், இணை இயக்குநர் (கல்வி), புதுச்சேரி, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்கள் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, கடலூர், வேலூர், சென்னை) பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாகவோ, நேரடியாக வந்தோ மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பக் கூடாது. குறிப்பிட்ட நாளுக்கு பின்பு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Keep Touch With www.kalvisolai.com
what about 10th attempt exam application/date for Oct 2011!
ReplyDelete