நாடு முழுவதும் அடுத்த கல்வி ஆண்டு (2012-13) முதல் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கப் பொது நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கப் பொது நுழைவுத் தேர்வை இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்த உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 25) அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து தமிழகத்திலும் பொது நுழைவுத் தேர்வு மீண்டும் நடத்தப்படுமா என்ற அச்சம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோரிடம் எழுந்துள்ளது.
இது குறித்து சட்ட வல்லுநர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து கடந்த 2007-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டதையும், அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதையும் அரசின் அப்போதைய கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் கூறினார்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருவதையும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்திய மருத்துவக் கவுன்சிலின் மருத்துவப் படிப்பு பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பாணைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி இடைக்காலத் தடை விதித்தார்.
தடை உள்ளதால்: "இந்திய மருத்துவக் கவுன்சிலின் பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை உள்ளதாலும், நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் உள்ளதாலும் தமிழக மாணவர்கள் அஞ்சத் தேவை இல்லை. எனினும் சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்க இந்திய மருத்துவக் கவுன்சில் எடுக்கும் முயற்சிகளைத் தடுக்கும் வகையில் தமிழக அரசின் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியம். அப்போதுதான் தமிழகத்துக்குள் பொது நுழைவுத் தேர்வு மீண்டும் நுழையாது' என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||