அரசு பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தவிர, 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் 6ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, 22ம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 29,388 தொடக்கப்பள்ளிகள், 8,377 நடுநிலைப் பள்ளிகள், 3,425 உயர்நிலைப்பள்ளிகள், 3,050 மேல்நிலைப்பள்ளிகள், 3,600 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு கோடியே 25 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த ஆண்டின் கடைசி வேலை நாள், ஏப்ரல் 21ம் தேதி என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், அந்த வேலை நாளுக்குள் தேர்வுகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 22ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||