பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்பணி வருகிற 17 ந்தேதி தொடங்குகிறது. கவனமாக திருத்தும்படி ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதி வருகிறார்கள்.
தமிழ் முதல் தாள், தமிழ் 2 வது தாள், ஆங்கிலம் முதல் தாள், ஆங்கிலம் 2 வதுதாள், இயற்பியல் ஆகிய தேர்வுகள் முடிந்துவிட்டன. வருகிற 17 ந் தேதி விடைத்தாள் திருத்தும்பணி தொடங்க உள்ளது.
இதற்காக உயர்மட்டத்தில் 43 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 32 பேர் முதன்மை கல்வி அதிகாரிகள், 4 பேர் அனைவருக்கும் கல்வி திட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மற்றவர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள்.
இதைமுன்னிட்டு அரசு தேர்வுத்துறை இந்த வருடம் நல்ல முறையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்தை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தலைமையில் நடைபெற்றது. இணை இயக்குனர் கருப்பசாமி முன்னிலையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கும் அதிகாரிகள் கூறிய ஆலோசனைகள் வருமாறு:
மாணவர்கள் நலன் கருதி விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யுங்கள். நாங்கள் கொடுத்த விடையையும் மாணவர்கள் எழுதிய விடையையும் ஒப்பிட்டு பார்த்து மதிப்பெண் வழங்குங்கள். யாரிடமும் பேசிக்கொண்டு திருத்தாதீர்கள். திருத்திய விடைத்தாள்களை கண்காணிப்பு அதகாரி எஸ்.ஓ. சரிபார்க்கவேண்டும். கூட்டலையும் சரிபார்க்கவேண்டும். அத்தனையையும் முதன்மை அதிகாரி பார்க்கவேண்டும். ஒவ்வொரு விடைக்கும் உரிய மதிப்பெண்ணை அதற்கு ஒதுக்கிய இடத்தில் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் கூட்டி மதிப்பெண் போடவேண்டும். கூட்டும்போது ஒரு முறைக்கு இருமுறை சரிபாருங்கள்.
கடந்த ஆண்டு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத ஆசிரியர்களை அழைத்து எச்சரித்து உள்ளோம். எனவே மாணவர்கள் நலன் கருதி சரியாக மதிப்பீடு செய்யுங்கள். சரியாக மதிப்பீடு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வசுந்தரா தேவி அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
super ooooooo... super
ReplyDeleteEverybody will be much obliged if the answerer keys of +2 and 10 th examinations are published in this web site
ReplyDelete