சென்னை:அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பத்தாம் வகுப்பு, ஓஎஸ்எல்சி வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் வகுப்பு தேர்வுகள் மார்ச் 22-ல் தொடங்கி ஏப்ரல் 11 வரை நடக்கிறது. இந்த தேர்வுகளை எழுத விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களுக்கும் மார்ச் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்படும். ஹால் டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட மண்டலத் துணை இயக்குநர்களால் அறிவிக்கப்படும் வினியோக மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். ஆங்கிலோ இந்தியன் தேர்வை எழுத உள்ளவர்கள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இவ்வகை தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.125 உடன், கூடுதல் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அதே நாளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||