பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் பொதுத் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் ஆரம்பமாகிறது. மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகின்றன.
கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 22ம் தேதி முடிந்தன. கடந்த ஆண்டு தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 5233 பள்ளிகளை சேர்ந்த 6,82,607 மாணவ மாணவியர் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 81.9 சதவீதமும், மாணவிகள் 88 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய மொத்த மாணவ மாணவியரில் 392747 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிந்தன. கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வை 844280 மாணவ மாணவியர் எழுதினர்.
மொத்த தேர்ச்சி வீதம் 82.5. அதில் மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவியர் 85.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். 417371 பேர் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தனர். திருநெல்வேலியை சேர்ந்த மாணவி
ஜாஸ்மின் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
மெட்ரிக்குலேஷன் தேர்வில் 129145 மாணவ மாணவியர் எழுதினர். மொத்த தேர்ச்சி வீதம்93.2 சதவீதம். மாணவியர் 96.4 சதவீதமும், மாணவர்கள் 93.2 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். 12045 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வில் சத்தியமங்கலம் மாணவி பவித்ரா மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார்.
இந்நிலையில் , 2011ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ்2, பத்தாம் வகுப்பு, மெட்ரிக்குலேஷன், ஓ.எஸ்.எல்.சி மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளுக்கான அதிகாரப் பூர்வ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
இதன்படி பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிகின்றன. பத்தாம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி முடிகின்றன. மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22ம் தேதி தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி முடிகின்றன. பிளஸ் 2 வில் எட்டு லட்சம் பேர் உட்பட இந்த தேர்வுகளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||