செஞ்சி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் செஞ்சுருள் சங்க மாவட்ட கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.உதவி தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். மாவட்ட செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார். தமிழ்நாடு , உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஏழுமலை பேசினார்.கூட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பதற்கான விழிப்புணர்வு செய்திகளை மாணவர் களுக்கு கொண்டு செல்லும் முறைகள் தெரிவிக்கப்பட்டது.
எய்ட்ஸ் சார்ந்த குறும்படங்கள் திரையிடப்பட்டன.கல்வி மாவட்ட அளவிலான 150 பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், கருத்தா ளர்கள் ஜெயச்சந்திரன், தண்டபாணி, ஞானவடிவு, செஞ்சி மருத்துவமனை ஐசிடிசி.,கவுன்சிலர் சரவணகுமார், டெக்னீசியன் விஜயகுமார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமன், ஆசிரியர்கள் பாஸ் கரன், சிவக்குமார், காளிதாஸ், ஆல்பர்ட், வசந்தகுமார் செய்தனர். ஆசிரியர் அண்ணாமலை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||