விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி விழுப்புரம் அருகே கோலியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது. 27 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 42 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 1 நகராட்சி பள்ளி, 21 மெட்ரிக் பள்ளிகள் என 91 பள்ளிகளில் இருந்து சுமார் 350 மாணவர்கள் தங்களது 190 படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.
மாசுப்பட்ட நீரை சுத்தப்படுத்துதல், சாண எரிவாயு, மழை நீர் சேகரிப்பு, மருத்துவ தாவரங்கள், பசுமை இந்தியா என் கனவு உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள் ளது. அறிவியல் கண்காட்சி துவக்க விழாவுக்கு முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி தலைமை தாங்கினார்.
ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்து பேசியதாவது:
தங்களிடையே தேங்கி கிடக்கும் ஆற்றலை வெளிகொண்டுவந்து சமுதாயம் பயனடைவதற்கு மாணவர்கள் செயல்படுகின்றனர். பல்நோக்கு சிந்தனை, அறிவாற்றல் மேம்பட இக்கண்காட்சி உதவியாக இருக்கிறது. மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வர வாய்ப்பாக அமைந்து உள்ளது. சமுதாயத்திற்கு புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் தருவதற்கு தூண்டுகோளாக இக்கண்காட்சி அமையும். மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும். சமுதாயத்தில் அறிவியல் மாற்றம் மற்றும் நிகழ்வுகள் எப்படி நடக்கிறது என்பதை மாணவர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் பூபதி, சண்முகம், தொடக்கக்கல்வி அலுவலர் செங்குட்டுவன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழிதேவி, கோலியனூர் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியர் சம்பந்தம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||