ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 811 முதுகலை ஆசிரியர்களுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
புதிதாக தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கவுன்சிலிங், சென்னை சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழ் ஆசிரியர்கள் 50 பேர், ஆங்கில ஆசிரியர்கள் 125 பேர், கணித ஆசிரியர்கள் 180 பேர், இயற்பியல் ஆசிரியர்கள் 115 பேர், வேதியியல் ஆசிரியர்கள் 100 பேர், தாவரவியல் ஆசிரியர்கள் 69 பேர், விலங்கியலில் 61 பேர், பொருளியலில் 28 பேர், வணிகவியலில் 33 ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
மேலும், வரலாறு பாட ஆசிரியர்கள் 18 பேர், புவியியல் ஆசிரியர்கள் நான்கு பேர், அரசியல் அறிவியல் பாட ஆசிரியர்கள் இரண்டு பேர், உடற்கல்வி இயக்குனர்கள் (நிலை-1) 26 பேர் ஆகியோருக்கும் பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் வழங்கினார். மொத்தம் 811 பேர், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம், பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, இணை இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||