வவ்வால்
சிறிய வவ்வால்களால் பார்க்க முடியாது. அவற்றிற்கு வெளிச்சமும் அவசியமில்லை. அவை வாயாலோ, மூக்காலோ ஒருவித ஓசையை எழுப்புகின்றன. இதை "அல்ட்ராசானிக் ஓசை' என்று சொல்வார்கள். மனிதர்களால் இந்த ஓசையைக் கேட்க முடியாது. இந்த ஓசை, முன்னால் உள்ள பொருட்களின் மீது பட்டுத் திரும்பி வரும். இப்படித் திரும்பி வரும் எதிரொலியின் தன்மையைப் புரிந்துகொண்டு, இந்தப் பொருட்களின் பருமனையும், வடிவத்தையும், அது இருக்கின்ற தூரத்தையும், அதன் அசைவையும் வவ்வால்கள் தெரிந்துகொள்ளும்.
வளர்ந்த பெரிய வவ்வால்கள் பார்வைத் திறனைப் பயன்படுத்திதான் இரவு நேரங்களில் பறக்கின்றன. வவ்வால்கள் பொதுவாக பழங்களையே விரும்பி உண்ணும். வெளிநாடுகளில், மற்ற பாலூட்டிகளின் உதிரத்தைக் குடிக்கின்ற வவ்வால்களும் உண்டு.
சிப்பிக்குள் முத்து
கடலின் அடியில் வாழ்கின்ற ஒரு வகை சிப்பிகள்தான் முத்துக்களை உண்டாக்குகின்றன. நன்நீரில் வாழ்கின்ற சில சிப்பிகளிலும் எப்போதாவது முத்துக்கள் இருக்கும். முத்துச் சிப்பியின் ஓடு, இரு படலங்கள் உடையதாகவும், உறுதியானதாகவும் இருக்கும். அதன் உள்ளே இருப்பது அதி மென்மையான உடற்பகுதி. இந்த மென்மையான உடற்பகுதியைக் காப்பதற்காகத்தான் கடினமான மேலோடு இருக்கிறது. உடற்பகுதியை மூடுகிற, வெளிப்புறத்தில் உள்ள சவ்வை "மான்டில்' என்று குறிப்பிடுவார்கள். இந்த மான்டிலுக்கும், மேலோட்டிற்கும் இடையில் எதிர்பாராதவிதமாக ஏதாவது மணல் துகளோ, மற்ற ஒட்டுண்ணிகளோ எப்போதாவது புகுந்துவிடும். இதுபோன்று வெளியிலிருந்து உள்ளே நுழையும் பொருள் சிப்பியின் உடலில் ஒரு விதமான உறுத்தலை உண்டாக்கும். இப்படி உறுத்தலை ஏற்படுத்தித் தொல்லை தரும் பொருளை வெளியேற்ற முடியாமல் போகும்போது, அப்பொருளினால் ஏற்படும் தொல்லையைத் தவிர்ப்பதற்கு சிப்பி ஒரு செயலைச் செய்யும்.
மான்டில் என்று சொல்லப்படும் இப்படலத்தின் ஓரத்தில் கொஞ்சம் செல்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து கால்சியம் கார்பனேட்டின் ஒருவித நீர்மப் பொருள் தோன்றும். இந்தத் திரவம் உள்ளே நுழைந்த பொருளை மூடும். மீண்டும் மீண்டும் இந்த திரவம் உருவாக்கப்பட்டு அது அந்தப் பொருளின் மீது படிந்தபடியிருக்கும். இப்படிப் படிந்தவை கெட்டிப்பட்டுத்தான் முத்தாக மாறுகிறது.
சிப்பிகள் கடலின் அடியில் உள்ள பாறைகளில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். முத்தெடுப்பவர்கள் இவற்றைப் பெயர்த்தெடுத்து மேலே கொண்டு வருவார்கள். இவர்கள் கொண்டு வருகின்ற எல்லா சிப்பிகளிலும் முத்துக்கள் இருக்காது. ஒரு சிலவற்றில்தான் முத்துக்கள் இருக்கும்.
முதன் முதலாக முத்து விவசாயத்தைத் தொடங்கியது ஜப்பானியர்கள்தான். முத்துச் சிப்பிகளால் கடலின் அடியில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, சிப்பிகளைப் பொறுக்கியெடுத்து பரிசோதனைச்சாலையில் வளர்ப்பார்கள். பிறகு சிப்பிகளின் உடற்பகுதியை லேசாகக் கீறி, உறுத்தும் பொருளை உள்ளே செலுத்துகிறார்கள். பிறகு அவற்றைக் கூடைகளில் இட்டு கடலில் வளர்க்கிறார்கள். இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்தச் சிப்பிகளை எடுத்துத் திறந்து பார்த்தால் நன்கு முதிர்ந்த முத்துக்கள் கிடைக்கும். இதுதான் முத்து விவசாயம்.
முத்துக்கள் பல நிறங்களில் உள்ளன. வெள்ளை, இளஞ்சிவப்பு, பழுப்பு நிறம், நீலம், மஞ்சள், பச்சை, கருப்பு முதலான நிறங்களில் முத்துக்கள் கிடைக்கின்றன. முத்துச் சிப்பியின் உணவு, அது வாழ்கின்ற தண்ணீரின் வெப்பம் முதலான அம்சங்கள் இந்த நிற வித்தியாசங்களுக்குக் காரணங்களாக அமைகின்றன. அதுபோல முத்துக்கள் எல்லாம் உருண்டை வடிவில்தான் இருக்கும் என்றில்லை. நீள உருண்டை வடிவிலும், சதுரவடிவிலும் முத்துக்கள் உருவாகும். உருண்டை வடிவான முத்துக்களுக்குத்தான் விலை அதிகம்.
ஒட்டகம்.
உடலிலிருந்து தண்ணீர் அதிகம் வெளியேறுவதை தவிர்ப்பதற்கான அமைப்புகள் ஒட்டகத்தின் உடலில் உண்டு. மனித உடலின் வெப்பநிலை, வியர்வையின் காரணமாக சீராக வைக்கப்படுகிறது. பாலைவனத்தில் வெப்பம் அதிகரிப்பதற்குத் தகுந்தபடி தன் உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதற்கு ஒட்டகத்தால் முடியும். அது 41 டிகிரி செல்சியஸ் வரை இப்படி அதிகரிக்கும். அந்த வெப்ப அளவில் ஒட்டகத்திற்கு வியர்வை வராது. மனிதர்களுக்கு வியர்வையின் மூலமாக ஏற்படுகின்ற நீரிழப்புபோல ஒட்டகத்திற்கு ஏற்படாது. நீரிழப்பு ஏற்பட்டாலும், அதை ஏற்றுக் கொள்ளும் திறன் அதற்கு உண்டு.
சாதாரண பாலூட்டிகளின் உடலில் உள்ள நீரளவில் 20 சதவீதம் இழப்பானால், பிறகு அந்த உயிரினத்தால் வாழ முடியாது. ஒட்டகங்களால் 40 சதவீதம் நீரிழப்பைக் கூட தாங்கிக் கொள்ள முடியும். ஒட்டகங்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களின் பிரத்தியேகத் தன்மையால்தான் இந்தளவு நீரிழப்பை அது தாங்கிக் கொள்கிறது. தவிர, தண்ணீர் கிடைக்கும் போது அது மிக மிக அதிகமாக தண்ணீர் குடிக்கும். ஒட்டகத்தைப் போன்ற அசைபோடும் எல்லாப் பிராணிகளுக்கும் வயிற்றில் நான்கு அறைகள் இருக்கும். இந்த நான்கு அறைகளில் முதலாவதில் உணவுடன் கலந்த நிறையத் தண்ணீர் இருக்கும். இதைத் தவிர, தண்ணீரை மட்டுமே சேகரித்து வைக்கும் அமைப்பு எதுவும் ஒட்டகத்தின் உடலில் இல்லை. அதன் திமிலில் தண்ணீர் அல்ல, கொழுப்புதான் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உணவு கிடைக்காதபோது ஒட்டகத்தின் உடல் இந்தக் கொழுப்பை உபயோகப்படுத்திக் கொள்ளும்.
மூச்சுக் காற்றின் மூலமாக நீராவியின் வடிவில், நீர் இழப்பாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த இழப்பைக் குறைப்பதற்கு ஒட்டகத்திற்கு ஒரு பிரத்தியேக அமைப்பு இருக்கிறது. அதன் மூக்கிற்குள், காகிதச் சுருள் போல சுருண்டு கிடக்கிற ஒரு அமைப்புதான் இது. தண்ணீரை உறிஞ்சும் திறன் உள்ள மெல்லிய ஒரு படலத்தால் இந்தப் பாகம் மூடப்பட்டிருக்கும். நீராவி கலந்த வெப்பமான காற்றை வெளியே விடும் போது, அதிலுள்ள நீராவி முழுவதையும் இந்த படலப் பகுதி உறிஞ்சிக் கொள்ளும். இப்படி சாதாரண பாலூட்டிகளில் சுவாசம் மூலமாக இழப்பாகிற நீர்ச்சத்தில் 70 சதவீதம் வரை தவிர்க்க ஒட்டகங்களால் முடியும். இதன் உடலிலிருந்து சிறுநீராக வெளியேறுகிற நீரின் அளவும் மிகக் குறைவுதான். இதுபோன்ற காரணங்களால்தான், ஒட்டகம் பாலைவனத்தில் வாழக்கூடிய தகுதி பெற்றிருக்கிறது.
உடலின் வெப்பநிலை சீராகப் பராமரிக்கப்படுவது எப்படி?
தவளை, பாம்பு போன்றவை குளிர் ரத்தப் பிராணிகளாகும். மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம்? குளிர் ரத்தமாகவோ, வெப்ப ரத்தமாகவோ இருப்பதால் என்ன பயன்?
குளிர் ரத்தப் பிராணிகளின் உடல் வெப்ப நிலை, எப்போதும் ஒரே நிலையில்தான் இருக்கும்.
சூழ்நிலைக்கு ஏற்ப மாறாது. அதாவது, அவற்றின் உடலால் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள முடியாது.
இதன் காரணமாக பாம்பு, தவளை போன்றவற்றின் உடல் மிகவும் குளிர்ந்து விடும்போது, உடல் வெப்பத்தை அதிகரித்துக் கொண்டு உயிர் வாழ அவை வெயிலில் காய்வது உண்டு. அப்படிச் செய்யவில்லை என்றால், ஒரு நிலைக்குமேல் அவற்றால் உயிர்வாழ முடியாது.
ஆனால், நமது வெப்பச் சமநிலையை நம் மூளை பராமரிக்கிறது. நம் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் எனும் ஒரு பகுதி, ஒரு இயற்கை இயந்திரத்தைப்போல இந்தப் பராமரிப்பு வேலையைச் செய்கிறது.
ஹைபோதாலமஸ் பகுதிக்குள் பாய்ந்து செல்லும் ரத்தத்தின் வெப்பநிலையை வைத்தும், வெப்பத்தை நன்கு உணர்ந்துகொள்ளும் தன்மை கொண்ட, தோலின் கீழே முடிவடையும் நரம்புகள் அனுப்பும் தகவல்களின் அடிப்படையிலும்தான் ஹைபோதாலமஸ் செயல்படுகிறது.
வழக்கமான வெப்பநிலையைவிட, உடல் வெப்பநிலை அதிகரித்தால் ஹைபோதாலமஸின் ஒரு பகுதியும், உடல் வெப்பநிலை குறைந்தால் ஹைபோதாலமஸின் மற்றொரு பகுதியும் அவற்றைச் சரியாக உணர்ந்துகொண்டு செயல்படும் வகையில் மூளை அமைந்துள்ளது.
உடலின் வெப்பநிலை தேவையைவிட அதிகரித்தால், வியர்வை மூலம் வெப்பம் வெளியேற்றப்படும்.
அதேநேரம் சுற்றுப்புறம் குளிராக இருந்தால், உடல் மாற்றத்தின் ஒரு பகுதியாக கூடுதல் வெப்பநிலை உருவாக்கப்படும். நடுக்கம்போன்ற தசைச் செயல்பாடுகளும் உருவாக்கப்படும்.
உடல் செயல்பாடுகளின் ஒரு பகுதியான அனிச்சைச் செயல்பாடுகள், நரம்புப் பாதைகளில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் உடலின் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.
கடுமையான வெப்பநிலையை தாங்கிக்கொள்ள முடியாமல், உடலில் உள்ள நீர் பெருமளவு வெளியேற நேர்ந்தால், "சன் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்பத்தாக்கு காரணமாக உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும். இதுபோன்ற ஆபத்துக்களை ஹைபோதாலமஸ்
வெüவால்கள் பாலூட்டும் இனத்தைச் சேர்ந்தவை. அதன் பின் கால்கள் மிகவும் பலவீனமானவை. அதனால் தரையில் நிற்பதற்கோ, நடப்பதற்கோ வெüவால்களால் முடியாது. தரையில் ஊர்ந்து செல்வதற்கும், மரத்தில் ஏறவும்தான் அவற்றால் முடியும். பறப்பதே அவற்றிற்கு மிகவும் சுலபமானது. வெüவால்களின் இரண்டு முன்கால்களிலும் நீண்ட விரல்கள் இருக்கின்றன. இந்த விரல்களுக்கு இடையில் சவ்வுபோன்ற பகுதி உண்டு. இந்த சவ்வுப் படலத்தை சிறகுபோல விரித்துதான் அவை பறக்கின்றன.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||