விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 108வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் நேற்று நடந்தது. காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்வதற்கு காமராஜர் முக்கிய காரணம். கல்வி வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகத்தோடு ஓப்பிட்டு பார்த்து செயல்பட வேண்டும் என்று மத்திய செயலாளர் கூறினார். அந்த கூற்றின் அடிப்படைக்கு காரணம் காமராஜர் என்றால் மிகையாகாது. பட்டி தொட்டிகளில் எல் லாம் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் ஆரம்ப கல்வி பெற உயிர் மூச்சாக காமராஜர் வாழ்ந் தார். முதல்வராக பதவி யேற்ற பிறகும் எளிமையாக வாழ்த்தவர். மாநில தலைமை பதவி, முதலமைச் சர் ஆகியோரை காமராஜர் தேர்வு செய்தார். அவருடன் கலந்து ஆலோசித்துவிட்டு நேரு முடிவு செய்வார்.
தமிழகம் முன்னேற தொழிற்சாலைகள், நீர்நிலைகள் அவசியம் என்று கூறி முனைப்போடு செயல்பட்டார். எதிர்கட்சிகள் பாராட்ட கூடிய அளவில் நடந்து கொண்டார். காமராஜரை பார்த்து பச்சை தமிழன் என்று கூறுவார்களே தவிர தவறாக ஒரு வார்த்தை கூட எதிர்கட்சியினர் பேச மாட்டார்கள். ஒருவர் சிறந்த குடிமகனாக வருவதற்கு அடிப்படை தேவை கல்வி. கல்வியில் இலக்கை நிர்ண யித்து அதனை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள வேண்டும். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து அர சாணை மட்டும் போட்டால் போதாது என்று அதனை சட்டமாக கொண்டு வந்த வர் முதல்வர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார்.
காமராஜர் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பழனிசாமி பரிசுகளை வழங்கினார். விழாவில் முதன்மை கல்வி அலுவலர் குப்புசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி, தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||