வாழ்வியலின் அடிப்படை நூலாகக் கருதப்படுவது திருக்குறள்.
உலக முழுவதும் போற்றப்படக் கூடிய பொது மறையாக இருக்கும் இந்நூலை, தம் மாநிலத்தவரும் படித்து பயனுற வேண்டும் என்று மணிப்பூரியில் மொழி பெயர்த்துள்ளார் சொய்பம் ரெபிக்கா தேவி.
இவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். எம்எஸ்ஸி தாவரவியல், எம்ஏ மொழியியல், எம்ஏ மொழிபெயர்ப்பியல் முடித்துள்ளார். மைசூல் உள்ள மத்திய மொழி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கட்டுரையாளராகப் பங்கேற்றுள்ள ரெபிக்கா தேவி, "தமிழ் மற்றும் மணிப்பூ மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமைத் தன்மை' தொடர்பாக கட்டுரை சமர்ப்பித்துள்ளார். "இரு மாநிலங்களும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் இரு மொழிகளுக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன' என்கிறார் ரெபிக்கா தேவி.
மணிப்பூர் மற்றும் பர்மா எல்லையில் மொரே என்ற ஊர் உள்ளது. இங்கு தமிழர்கள் அதிகம்பேர் இருக்கின்றனர். எனது ஊரும் அருகே இருப்பதால் இயல்பாகவே தமிழ் எனக்கு அறிமுகம் இருந்துத. மணிப்பூல் படித்துக் கொண்டிருந்தபோது சென்னையைச் சேர்ந்த பேராசியர் சந்திரா, தமிழ் இலக்கியங்களின் பெருமைகளைப் பற்றி கூறியபோது தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றியும் அவை தெவிக்கும் கருத்துகளைக் கேட்டபோது, தமிழை நானே படித்து இன்புற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. மொழி எதற்கும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அடிப்படைத் தமிழ் குறித்து 10 மாத சான்றிதழ் படிப்பை படித்து முடித்தேன்.
வாழ்வியல் நெறிகளைக் கொண்ட திருக்குறளை முழுமையாகப் படித்தேன். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் குறளில் இருக்கின்றன. குறளைப் படித்தால் போது, ஒருவன் முழுமையான மனிதனாகி விடுவான். எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட இவ்விஷயங்களை எனது மாநில மக்களும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால், திருக்குறளை மொழி பெயர்க்கும் முயற்சியில் இறங்கினேன்.
ஏறத்தாழ 2 ஆண்டுகளாக முழு முயற்சி எடுத்து தற்போது 1,330 குறட்பாக்களையும் மொழி பெயர்ப்பு செய்துள்ளேன். தமிழாய்வு நிறுவனம் எனது முயற்சிக்கு உறுதுணையாக இருந்தது. செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, திருக்குறள் மொழி பெயர்ப்பு நூலை தமிழாய்வு நிறுவனத்தின் உதவியோடு வெளியிட உள்ளேன். ஏழாயிரம் தமிழ் சொற்களுக்கு ஆங்கிலத்திலும், மணிப்பூயிலும் அருஞ்சொற்பொருள்களைக் கொண்ட அகராதியை வெளியிட்டுள்ளேன்.
திருக்குறள் மொழி பெயர்ப்பு நூல் வெளியீட்டுக்குப் பிறகு, தமிழ் காப்பியங்களையும் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் ரெபிக்கா.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||