விஞ்ஞானத்திலும், பொறியியலிலும் பிஎச்.டி., பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் சமீபகாலமாக மிகவும் குறைந்து வருகிறது. இந்த குறைபாட்டை சரிசெய்ய மத்திய அரசின் விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், ஒரு புதிய அகடமியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த அகடமியை நிறுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி அளித்தது.மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த பின், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகாசோனி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த அகடமியை அமைப்பதற்கான சட்ட முன்வடிவை வரும் பார்லிமென்ட் கூட்ட தொடரில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. புதிதாக அமைக்கவுள்ள அகடமியை, எந்த மாநிலத்தில் அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.தற்போது அந்த அகடமி ஆராய்ச்சி கவுன்சிலில் 37 பிரத்யேக கல்லூரிகளில் ஆராய்ச்சி குறித்த பாடத்திட்டங்கள் இந்த அகடமி மூலம் செயலாக்கப்படும். இதை நிறுவுவதற்கு 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 19 கோடி ரூபாயும், அடுத்த ஐந்தாண்டு திட்டத்தில் 62 கோடி ரூபாயும் செலவிட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.
விஞ்ஞான துறையில் 2006ம் ஆண்டு பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 8,420 பேர். சீனாவில் 22 ஆயிரத்து 953 பேர். அமெரிக்காவில் 30 ஆயிரத்து 452 பேர். இதே மாதிரி பொறியியல் கல்லூரியில் பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 10 ஆயிரத்து 58 பேர். சீனாவில் 12 ஆயிரத்து 130 பேர். அமெரிக்காவில் 7 ஆயிரத்து 400 பேர்.
கடந்த 1980ம் ஆண்டில் சீனாவை விட இந்தியாவில் அதிகமான மாணவர்கள் பிஎச்.டி., பட்டம் பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை குறைந்து வருவதால் பொறியியல், ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்லூரிகளுக்கு தகுதி பெற்ற ஆசிரியர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே, அகடமியை அமைப்பதன் மூலம் இந்த பிரச்னைக்கு முடிவு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அம்பிகாசோனி கூறினார்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||