எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 28ம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பல மாணவர்கள் மதிப்பெண்களின் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருப்பதாலும், செம்மொழி மாநாடு நடைபெறுவதாலும் மாணவர்களின் வசதிக்கு ஏற்ப மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.சென்னையில் இன்று மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் இவ்வாண்டு மாணவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 131 விண்ணப்பங்கள் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்டன. இவற்றுள் மாணவர்கள் 6123 பேர். மாணவிகள் 11708 பேர். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 2 மடங்கு அதிகமாக விண்ணப் பித்துள்ளனர்.
மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள 13 மாணவகர்கள் அனைத்து பாடங்களிலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேர் மாணவிகள், 7 பேர் மாணவர்கள். அவர்களின் விவரம்:
ஈரோடு பாரதிய வித்யாபவன் மாணவி சி.ஸ்ருதி, அதே பள்ளி மாணவி அபிநயா, ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் கவுதம், ஈரோடு பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வமலை முத்துக்குமரன், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி விஷ்ணுபிரியா, ஊத்தங்கரை எஸ்.வி.மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ், நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் அமரன், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜி.ஸ்ருதி, கோவில் பட்டி லட்சுமி மில்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா, ஒட்டன் சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளி மாணவர் பிரனேஷ், நாமக்கல் வித்யா விகாஷ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய் ராம், பழனி அக்ஷயா அகாடமி மாணவி அனுசுயா, ஈரோடு ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரி குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் பார்த்தசாரதி.மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு இம்மாதம் 28ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. 2வது கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 3வது வாரத்தில் நடைபெறும்.
முதல் கட்ட கலந்தாய்வானது, தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1398 எம்பிபிஎஸ் இடங்களுக்கு நடைபெறும். இதில் 433 இடங்கள் இதர சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கானதாகும். 370 இடங்கள் பிற்படுத்தப் பட்டவர்கள். 49 இடங்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள். 280 இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். 210 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். 42 இடங்கள் அருந்ததியர்கள். 14 இடங்கள் பழங்குடிகள்.
2வது கட்ட கலந்தாய்வு அரசு தொடங்கி உள்ள தர்மபுரி, திருவாரூர் மருத்துவ கல்லூரிகளுக்கும் ஐந்து தனியார் கல்லூரிகளுக்கும் நடைபெறும். பல மாணவர்கள் மதிப்பெண்களின் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்திருப்பதாலும், செம்மொழி மாநாடு நடைபெறு வதாலும் மாணவர்களின் வசதிக்கு ஏற்ப மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் மருத்துவ கல்லூரிகளான திருவாரூர், தர்மபுரி, விழுப்புரம் மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி பெற வேண்டியதன் காரணமாகவும் கலந்தாய்வுக்கு இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டது.
மத்திய அரசின் கமிட்டி விழுப்புரம், திருவாரூர், மருத்துவ கல்லூரிகளின் மறு ஆய்வுக்கு வருகிறார்கள். அவர்கள் கேட்டுள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக பூர்த்தி செய்திருப்பதால் விரைவில் அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||