இங்கிலாந்திலே பிறந்து வளர்ந்தவர் தாமஸ் பெயின். பன்னிரெண்டாம் வயது வரை மட்டுமே பள்ளிக்கூடத்துக்குச் சென்று படிக்கிற வாய்ப்பைப் பெற்ற பெயின், இளமையிலேயே வறுமையின் கோரப்பிடியில் உழன்றார். ஒரே வேலையில் நிலைத்து நிற்க முடியாத சூழலிலும், குடும்ப நிலைமை காரணமாக வெவ்வேறு வேலைகளையும் செய்து பார்த்தார்.
கலால் அலுவலகத்தில் பணிசெய்த போது அங்குள்ளவர்களைத் திரட்டி உரிமைக் குரல் எழுப்பியதால் உயர் அதிகாரிகளால் அவ்வேலையிலிருந்து விரட்டப்பட்டார் பெயின். வறுமையின் உச்சத்தில் வாடிய அக்கால கட்டத்தில்தான், பின்னர் உலகப் புகழ்பெற்றவராக விளங்கிய பெஞ்சமின் பிராங்கிளினைச் சந்தித்தார். பெஞ்சமின் பிராங்கிளின் அப்போது இங்கிலாந்து காலனி நாடுகளின் கமிஷனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
பெயினின் பிரச்னையைப் பரிவுடன் கேட்டறிந்த பிராங்கிளின், பெயினுக்குள் உறங்கிக்கொண்டிருந்த உள்ளொளியை ஓரளவு புரிந்துகொண்ட நிலையில் அவருக்கு ஒரு பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்து அமெரிக்காவில் அப்போது வசித்துவந்த தனது மருமகனிடம் அனுப்பினார். 1977-ம் ஆண்டு தனது முப்பத்தேழாவது வயதில் பெயின் அமெரிக்காவில் உள்ள ஃபிடெல்பியா நகருக்குச் சென்றார்.
"பென்ஸில்வேனியா மேகஸின்' என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பு நம்பிக்கையுடன் பெயினுக்கு அளிக்கப்பட்டது. கறுப்பு இன நீக்ரோ மக்களுக்கு அமெரிக்காவில் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். இக்கட்டுரை வெளிவந்து ஐந்து வாரங்களில் அமெரிக்காவில் முதன் முதலாக "அடிமை எதிர்ப்புச் சங்கம்' உருவானது.சமூகக் கொடுமைகள் குறித்தும், மக்கள் படும் அவதிகள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளும் சிறு பிரசுரங்களும் எழுதி வெளியிட்டு வந்தார் தாமஸ்பெயின். இப்பிரசுரங்களுக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்புக் கிடைத்ததோடு, படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது.
கலால் அலுவலகத்தில் பணிசெய்த போது அங்குள்ளவர்களைத் திரட்டி உரிமைக் குரல் எழுப்பியதால் உயர் அதிகாரிகளால் அவ்வேலையிலிருந்து விரட்டப்பட்டார் பெயின். வறுமையின் உச்சத்தில் வாடிய அக்கால கட்டத்தில்தான், பின்னர் உலகப் புகழ்பெற்றவராக விளங்கிய பெஞ்சமின் பிராங்கிளினைச் சந்தித்தார். பெஞ்சமின் பிராங்கிளின் அப்போது இங்கிலாந்து காலனி நாடுகளின் கமிஷனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
பெயினின் பிரச்னையைப் பரிவுடன் கேட்டறிந்த பிராங்கிளின், பெயினுக்குள் உறங்கிக்கொண்டிருந்த உள்ளொளியை ஓரளவு புரிந்துகொண்ட நிலையில் அவருக்கு ஒரு பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்து அமெரிக்காவில் அப்போது வசித்துவந்த தனது மருமகனிடம் அனுப்பினார். 1977-ம் ஆண்டு தனது முப்பத்தேழாவது வயதில் பெயின் அமெரிக்காவில் உள்ள ஃபிடெல்பியா நகருக்குச் சென்றார்.
"பென்ஸில்வேனியா மேகஸின்' என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பு நம்பிக்கையுடன் பெயினுக்கு அளிக்கப்பட்டது. கறுப்பு இன நீக்ரோ மக்களுக்கு அமெரிக்காவில் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். இக்கட்டுரை வெளிவந்து ஐந்து வாரங்களில் அமெரிக்காவில் முதன் முதலாக "அடிமை எதிர்ப்புச் சங்கம்' உருவானது.சமூகக் கொடுமைகள் குறித்தும், மக்கள் படும் அவதிகள் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளும் சிறு பிரசுரங்களும் எழுதி வெளியிட்டு வந்தார் தாமஸ்பெயின். இப்பிரசுரங்களுக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்புக் கிடைத்ததோடு, படிப்படியாக விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது.
"இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா பிரிவது தவிர்க்க முடியாது' என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாகத் தனது எழுத்துகள் மூலம் தொடர்ந்து வாதிட்டு வந்தார் தாமஸ்பெயின். "இங்கிலாந்து' எனும் தேசத்துக்கு கீழ்ப்படிந்த அடிமை நாடாக எக்காரணம் கொண்டும் அமெரிக்கா நீடிக்கக் கூடாது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு "பகுத்தறிவு' எனும் தலைப்பில் ஒரு சிறு நூலை எழுதி வெளியிட்டார்.
இங்கிலாந்தில் பிறந்திருந்தாலும், பெயினுக்கு, அமெரிக்கா புகுந்த வீடாக விளங்கினாலும், இங்கிலாந்தின் முடியாட்சிக்கு எதிராகக் குடியாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி அவர் எழுதிய "பகுத்தறிவு' நூல் அமெரிக்கர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
1776-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி, "பகுத்தறிவு' நூல் வெளியிடப்பட்டது. "ஓர் ஆங்கிலேயரால் எழுதப்பெற்றது' என்ற குறிப்புடன் வெளியான இந்த நூல், வெளிவந்த மூன்று மாதங்களில் 1,20,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. வெகு விரைவில் ஐந்து லட்சம் பிரதிகள் எவ்வித முயற்சியும் எடுக்காமலேயே விற்பனையானது.
அன்றிருந்த மக்கள் தொகையைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அமெரிக்காவில் அன்றிருந்த பதிமூன்று காலனிகளில் வாழ்ந்த எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரின் கையிலும் இந்தச் சிறுநூல் இருந்திருக்க வேண்டும் என்று கணிக்க முடிகிறது.
சிங்கம் அமர வேண்டிய இடத்தில் ஒரு கழுதை அமர நேரிட்டு மனித சமூகமே கேலி செய்யும்படியான ஒரு நிலைமையை அது அடிக்கடி தோற்றுவித்து விடுகிறது'' என்று முடியாட்சியால் ஏற்படக்கூடிய கேடுகள் குறித்து இந்நூலில் எரிமலையாய் வெடித்திருக்கிறார் தாமஸ்பெயின். ""முட்டாள்கள், போக்கிரிகள், தகுதியற்றவர்கள் ஏற்றம் காண்பதற்கு அது வழியைத் திறந்து விடுகிறது'' என்று எழுத்துச் சாட்டை கொண்டு விளாசியுள்ளார் பெயின்.
தாமஸ்பெயினின் அர்த்தமும் அழுத்தமும் ஆவேசமும் அடங்கிய வாதங்கள் நிறைந்த "பகுத்தறிவு' எனும் துண்டுப் பிரசுரம் போன்ற வெறும் 47 பக்கங்களை மட்டுமே உள்ளடக்கிய இச்சிறுநூல் அமெரிக்காவில் ஒரு பெரும் அரசியல் அதிர்வலையை உருவாக்கியது.
"உடனடியாகப் பயனளித்து, படர்ந்து, செல்வாக்குள்ளதாக நீடித்து நிலைத்துவிட்ட வேறு எந்த நூலையும் எந்த மனிதனும் இப்படி எழுதியதில்லை'' என்று "பகுத்தறிவு' நூல் குறித்து தனது கருத்தை "அமெரிக்கப் புரட்சியின் வரலாறு' என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார் ஜார்ஜ் டிரெவிலியன்.
தாமஸ்பெயினின் "பகுத்தறிவு' நூல் வெளியான ஆறு மாதங்களுக்குள் அமெரிக்கக் கண்டத்து காங்கிரஸ், ஃபிலடெல்பியாவில் உள்ள அரசாங்க மாளிகையில் கூடி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது.
இங்கிலாந்திடமிருந்து சுதந்திரமாக, சுயேச்சையாக அமெரிக்கா செயல்பட அடித்தளமிட்ட நூல்களில் பிரதானமான நூலாகிய "பகுத்தறிவு' போலவே அமெரிக்காவில் நிலவிய நிறவெறிக்கெதிராக உருவெடுத்த நூல்தான் "அங்கிள் டாம்ஸ் கேபின்'
"ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்' என்ற பெண்மணி அமெரிக்கா நாட்டில் சின்சினாட்டி நகரில் ஒரு மத போதகரின் மகளாகப் பிறந்தார். அன்று அமெரிக்காவில் இருந்த நிறவெறி கொண்ட எஜமானர்களாக விளங்கிய வெள்ளையர்கள் பலரால் சித்திரவதை செய்யப்பட்ட கறுப்பு நிற நீக்ரோ இன அடிமை மக்கள் மதபோதகர் நடத்திய பாடசாலைக்குத் தப்பித்து வந்து தஞ்சம் புகுந்தனர்.
அவர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்டுக் கேட்டு மதபோதகரின் மகள் ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் மனம் நெகிழ்ந்து எழுதிய காவியம்தான் "அங்கிள் டாம்ஸ் கேபின்'.
இரண்டு பாகங்களைக் கொண்ட மிகப்பெரிய நூலாம் "அங்கிள் டாம்ஸ் கேபின்' 1852-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதுதான் ஹேரியட் எழுதிய முதல் நூல். அந்நூல் அச்சடித்து வெளியான ஐயாயிரம் பிரதிகளில் முதல் நாளே மூவாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. மீதமுள்ள இரண்டாயிரம் பிரதிகளும் அடுத்த நாளே விற்கப்பட்டுவிட்டன.
இந்நூல் வெளியான ஓராண்டுக்குள் மூன்று லட்சம் பிரதிகள் அமெரிக்காவில் மட்டும் விற்றன. அக்காலத்திலேயே நவீன விசையால் இயங்கிய எட்டு அச்சு இயந்திரங்கள் இரவு பகலாக ஓடி இந்த நூலைத் தொடர்ந்து அச்சடித்த வண்ணமிருந்தன. இரண்டே ஆண்டுகளுக்குள் உலகெங்கும் சுமார் அறுபது மொழிகளில் இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.
ஹேரியட்டின் நூல் ஆதிக்க நிறவெறிக்கு எதிராக ஒரு பெரும் போரை உருவாக்க மக்களை ஆயத்தப்படுத்த முனைந்தது. ""இந்த உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கிய புத்தகத்தை எழுதிய சிறுபெண்'' என்று ஹேரியட் குறித்து, ஆப்ரகாம் லிங்கன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சமூகப் போக்குகளைச்சாடி மனித குலத்தைச் சிந்திக்க வைக்கும் புத்தகங்கள் வெளிவந்ததைப் போலவே, இயற்கை குறித்தும், மனிதகுல வரலாறு பற்றியும், ஆய்வு நோக்கிலும் அறிவியல் பார்வையிலும் நூல்கள் பல வெளிவரத் தொடங்கின. இந்த வரிசையில் டார்வின் எழுதிய "உயிரினங்களின் தோற்றுவாய்' மனிதனின் வழிவழியாக வந்த சிந்தனைப் போக்கையே மடைமாற்றம் செய்வித்தது.
"பீகிள்' என்ற ஆய்வுக் கப்பலில் பயணித்து ஐந்தாண்டுகள் மேற்கொண்ட கடலாய்வுக்குப் பிறகு அப்போது கிடைக்கப்பெற்ற விலங்குகளின் எலும்புக் கூடுகள், ராட்சத ஆமைகள், புழு பூச்சிகள், விநோத விலங்கினங்கள், தாவரங்கள் போன்றவற்றைக் கொண்டு ஆழமாகவும் வித்தியாசமாகவும் ஆய்வுகளை மேற்கொண்டார் விஞ்ஞானி டார்வின்.
இந்த ஆய்வின் விளைவாய் "இயற்கையின் தோற்றம்', "வாழ்க்கைப் போராட்டம்', "தகுதி மிக்கது மிஞ்சுவது' என்ற தனது அரிதினும் அரிதான கண்டுபிடிப்புகளை உள்ளடக்கி "உயிரினங்களின் தோற்றுவாய்' என்ற பூவுலகச் சிந்தனையைப் புரட்டிப் போட்ட நூலை எழுதிமுடித்தார். இந்நூல் புதிய கேள்வியையும் பலரின் மத்தியில் சர்ச்சையையும் உருவாக்கியது. ஆனால், காலத்தை வென்ற கருத்துக் கருவூலமாக அந்நூல் இப்போது உலகோரால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
டார்வினின் சமகாலத்தில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸின் "மூலதனம்' என்ற நூல் இதே அளவுக்கு உலகின் கவனத்தை ஈர்த்தது. மனிதகுல சமூகப் பொருளாதார அடிப்படை மாற்றம் குறித்து "மூலதனம்' நூல் அலசி ஆராய்ந்துள்ளது.
"இதுவரை அகில உலகளவில் தோன்றிய அறிஞர்கள் அனைவரும் உலகின் போக்குகளை விமர்சித்துள்ளனர், வியாக்கியானம் செய்துள்ளனர். ஆனால், கார்ல் மார்க்ஸ் தனது "மூலதனம்' நூலின் மூலமாக உலகை மாற்றி அமைக்கிற சூத்திரத்தைச் சொல்லியிருக்கிறார்' என்று "மூலதனம்' வெளிவந்த பிறகு தத்துவக்கீர்த்திமிக்கோர் தங்களது கருத்தை வெளியிட்டுள்ளனர்.
"மூலதனம்' நூலை உருவாக்கப் பதினைந்து ஆண்டுகள் முழுக்க முழுக்க ஐக்கியப்பட்டு ஈடுபாட்டோடு அர்ப்பணித்து உழைத்தார் கார்ல் மார்க்ஸ். இந்த நூலை உருவாக்குவதில் உடனிருந்து அரும்பணியாற்றியதோடு, முறைப்படுத்தி அச்சிட்டு வெளிக்கொணர்வதில் தோழமைக்கு இலக்கணம் வகுத்த கார்ல் மார்க்ஸின் நெருங்கிய தத்துவயியல் ஆய்வாளர் பிரடரிக் எங்கெல்ஸ் பெரும் பங்காற்றியுள்ளார். ஒரு நூல் சமூக அமைப்பை மாற்றும் வல்லமையுடையது என்பதற்கு "மூலதனம்' ஒரு சிறந்த முன்னுதாரணம்.
"எத்தனை நூல்களை வாசிக்கிறோம் என்பதல்ல... எத்தகைய நூல்களை வாசிக்கிறோம் என்பதுதான் முக்கியம்'' என்றார் ஜவாஹர்லால் நேரு.
ஒரு "சத்திய சோதனை' நெல்சன் மண்டேலாவை சிந்திக்கத் தூண்டியது போல, ஒரு "திருக்குறள்' மகாத்மா காந்தியடிகளை வியப்புக்குள்ளாக்கியது போல, நம் மண்ணில் தோன்றிய மாபெரும் மனிதர்களின் மகத்தான கருத்துகள் ஞானப் பெட்டகங்களாகப் புத்தக வடிவில் நம்முன் விரிந்து கிடக்கின்றன.
இல்லந்தோறும் நூலகங்களை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும். "நூலகமில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற புதுமொழியை திக்கெட்டும் பரப்ப வேண்டும். "நல்ல நூல்களே நல்ல நண்பர்கள்' என்ற சிந்தனை இளைய நெஞ்சங்களின் இதயத்தில் கல்வெட்டாய்ப் பதிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||