பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த செல்கள் அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது, இந்த “ஸ்டெம்” செல்கள் மூலம் குணப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையின் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் “ஸ்டெம்” செல்கள் குணப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள பிரிஷ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது பற்றிய ஆய்வை மேற் கொண்டனர்.
“ஸ்டெம்” செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்திய ஒரு நாளில் அவை ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளை சரி செய்து குணப்படுத்துவது தெரியவந்துள்ளது.
மேலும் இருதய அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கும் இது பெருமளவில் உதவி கரமாக இருந்தது. இந்த ஆய்வின் மூலம் உலகில் உள்ள லட்சக்கணக்கான இருதய நோயாளிகள் குண மடைந்து நீண்ட நாள் வாழ் வார்கள்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||