அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலிங், சென்னையில் நேற்று நடந்தது. 413 பேருக்கு பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.சென்னை அசோக்நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் நேற்று கவுன்சிலிங் நடந்தது. இதற்காக, மாநிலம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் வந்திருந்தனர். காலையில், காலிப்பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டன.
அதன்பின், இணை இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், கார்மேகம், தர்ம.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மூன்று குழுக்கள், தலா 10 மாவட்டங்கள் வீதம் கவுன்சிலிங்கை நடத்தின. மாவட்டத்திற்குள் 273 தலைமை ஆசிரியர்களும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு 140 தலைமை ஆசிரியர்களும் என 413 பேர், பணியிட மாறுதல் உத்தரவுகளை பெற்றனர். அவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம், மாறுதல் உத்தரவுகளை வழங்கினார்.சென்னை மாவட்ட அளவிலான கவுன்சிலிங், முதன்மைக் கல்வி அலுவலர் நரேஷ் தலைமையில், சைதாப்பேட்டையில் நடந்தது. இதில், 200 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||