நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும், எனவே உணவு தானிய உற்பத்தியை பெருக்க வேண்டுமென மத்திய திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அமைக் கப்பட்ட மத்திய அமைச்சர் களை கொண்ட குழுவின் கூட் டம், கடந்த வாரம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.இதில் உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஆராய அமைக்கப் பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்து சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைபடி, நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை, கடந்த 2005ம் ஆண்டு 37 கோடியாக இருந்தது. ஆனால் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை உயர்ந்து, 40.5 கோடியாக இருக்கும். இதன்படி நடப்பு ஐந்தாண்டு திட்டத்தின் முடிவில், ஏழைகளின் எண்ணிக்கை 3.5 கோடி உயர்ந்துவிடும். எனவே உணவு தானிய தேவைகளும் பன்மடங்கு உயரும்.நாட்டிலுள்ள ஏழைகள் கணக் கெடுப்பு அடிப்படையில், ஆண்டுக்கு 34 மில்லியன் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக மத்திய அரசு,மாநில அரசுகளுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக அளிக்கிறது.2005ம் ஆண்டின் ஏழைகள் கணக்கெடுப்பின்படி வழங்கப் பட்ட மானியத்தை விட, 6 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகும். 2010-11ம் ஆண்டில் உணவு மானியம் 55 ஆயிரம் கோடி ரூபாயாக அரசு அறிவித்துள் ளது.தற்போதைய ஏழைகளின் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த தொகை மிகக்குறைவு என்பதுதான் உண்மை.
எனவே ஏழைகளுக்கு அளிக் கப்படும் உணவு மானிய தொகையை தோராயமாக கணக் கிட்டு, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஒவ்வொருவருக்கும் 6 கிலோவும், ஒரு குடும்பத் திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் கிடைக்கும் வகையில், மானியம் வழங்க வேண்டுமென கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.இதனை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை குழு ஏற்றுக் கொண்டது.மேலும் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதிலுள்ள, நடைமுறை சிக்கல் களை கருத்தில் கொண்டு, அதில் சில மாறுதல்களை செய்யுமாறு, காங்கிரஸ் தலைவர் சோனியா, அரசுக்கு விடுத்த வேண்டுகோளையும் அமைச்சரவை குழு ஏற்றது.
மேலும் கமிட்டி அளித்துள்ள மற்றொரு பரிந்துரையில், மாநில அரசுகள் பொது வினியோக திட்டத்தை முறைபடுத்த வேண்டும்.மத்திய அரசு அளிக்கும் மானியம் பயனாளிகளை நேரடியாக செல்லும் வகையில், பொது வினியோக முறை இருக்க வேண்டும்.இதற்காக பொது வினியோக முறை திட்டத்தை, தேசிய அடையாள அட்டை திட்டத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்த வேண்டும் அல் லது டில்லி மற்றும் சண்டிகர் நகரங்களில் செயல்படுத்தப் பட்டுள்ள முன்னோடி திட்டம் போன்று,வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கி, பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.இந்நிலையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, நாட்டில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள 11.52 கோடி குடும் பங்களை பொதுவினியோக திட்டத்தில் சேர்ப்பது குறித்து, அமைச்சரவை குழு முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||