உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக நாடுகளைச் சேர்ந்த மலை ஏறும் நிபுணர்கள் சாதனை படைத்து வருகின்றனர். அவ்வாறு மலை ஏறு பவர்கள் தாங்கள் கொண்டு செல்லும் குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு திரும்புகின்றனர். இதனால் அவை பனிமலையின் உச்சியில் தேங்கி கிடக்கின்றன.
இதனால் இமயமலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் கிடக்கும் குப்பை குவியலை அகற்றும் பணியில் பலர் குழுக்களாக ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களால் ஒரு குறிப்பிட்ட அளவு உயரத்து மேல் அதாவது 8 ஆயிரம் அடிக்கு மேல் செல்ல முடிய வில்லை. ஏனெனில் அங்கு ஆக்சிஜன் இல்லை. மேலும் மிகவும் செங்குத்தான பகுதி என்பதால் யாராலும் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் மிகவும் ஆபத்தான பகுதியான எவரெஸ்ட் உச்சியில் குப்பைகளை அகற்றும் பணியில் நேபாளம் மற்றும் வெளிநாட்டு மலை ஏறும் குழுவை சேர்ந்த 20 பேர் ஈடுபட உள்ளனர்.
இவர்கள் நம்ஜியால் ஷெர்பா தலைமையில் புறப்பட உள்ளனர். தங்கள் பயணத்தை இந்த வாரம் தொடங்க உள்ளனர். முதன் முதலாக சுமார் 8,850 அடி உயரத்தில் ஏறி குப்பைகளை அகற்ற உள்ளனர். ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 7 முறை ஏறி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||