புவி வெப்பமாவதைத் தடுக்க, ஒரு பள்ளிக்கு 100 மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.புவியின் வெப்பம் அதிகரித்து வருவதால், பருவநிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. பனிமலைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகள் அழியும் அபாயம் எதிர்நோக்கியுள்ளது.புவி வெப்பமாவதற்கு மரங்கள் வெட்டப்படுவது, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.
அதிகளவில் மரங்கள் வளர்த்தால் மட்டுமே வெப்பம் அதிகரிப்பதை தடுக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், மரம் வளர்ப்பு திட்டத்தை பள்ளிகளில் தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.100 மரம்: வரும் கல்வி ஆண்டில், ஒவ்வொரு பள்ளியிலும் 100 மரக்கன்றுகளை நடுவதற்கும், அவற்றை மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பெறவும், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போல, மாணவர்களிடையே தீவிரவாத எதிர்ப்பு எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில், வரும் 21ம் தேதி, கட்டுரை, பேச்சு, பாட்டுப் போட்டிகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||