அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் 150 அதிகாரிகளை தேர்வு செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. கடந்த 1990ல் அமைக்கப்பட்ட கீதாகிருஷ்ணன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 1980களில் ஆண்டுக்கு 150 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 1990களில் அது 55லிருந்து 60 ஆகக் குறைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது பல்வேறு அரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை தேவையிருப்பதால், மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதுகுறித்து அமைச்சரவைச் செயலர் சந்திரசேகர் கூறியதாவது: இந்த ஆண்டு 150 அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறோம். மத்தியில் இயக்குனர் நிலையிலும், மாநிலங்களில் கலெக்டர், சூப்பரன்டென்டெண்ட், டி.ஐ.ஜி., ஆகிய நிலைகளிலும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்கள் தொகை, அரசு நலத்திட்டங்கள், மக்களின் குறைகள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மேலும், அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. தற்போது முதன்மைத் தேர்வு, முக்கியத் தேர்வு,நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடக்கின்றன. இதற்கு அடிப்படைத் தகுதியாக பட்டப்படிப்பு வேண்டும்.
நிர்வாக சீர்திருத்த கமிஷன், தற்போது பிளஸ் 2 முடித்தவுடனேயே தேர்வை ஆரம்பித்து விடலாம் என்று ஆலோசனை கூறியிருக்கிறது. அதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதையும் ஆலோசிப்போம். அதிகாரிகளை மதிப்பிடுவதில் தற்போது பழைய முறைதான் இருக்கிறது. அதையும் மாற்றி புது மதீப்பீட்டு முறை கொண்டுவரப்படும். இவ்வாறு சந்திரசேகர் தெரிவித்தார். இந்த புதிய மாற்றங்கள் அடங் கிய 'சிவில் சர்வீஸ் -2010' மசோதா இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தயாராகி விடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||