எங்கள் இல்லத்திருமண விழாவிற்கு வருகை தந்த விழுப்புரம் மாவட்டக்கல்வி அலுவலர் திரு பூபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு டிசம்பர் 9ம் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளி, கல்லூரி வாகனங்களை இயக்குவது குறித்த ஆலோசனைக் கூட் டம் விழுப்புரத்தில் நடந்தது. ஆட்சியர் பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:
பள்ளி, கல்லூரி வாகனங்களில் முன் மற்றும் பின்புறம் பள்ளி, கல்லூரி வாகனம் என்று எழுத வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு கூடுதலாக மாணவர்களை ஏற்றி செல்லக் கூடாது. வாகனத்தில் மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி மற்றும் வாகனத்தின் ஜன்னல்களில் பாதுகாப்பு கம்பிகள் படுக்கை வசமாக கட்டாயம் பொருத்த வேண்டும். தீயணைப்பு கருவிகள் பொருத்த வேண்டும்.
வாகனத்தில் தெளிவாக தெரியும்படி கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுத வேண்டும். வாகன கதவுகளில் தரமான மற்றும் பாதுகாப்பான தாழ்ப்பாள்கள் பொருத்த வேண்டும். 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஓட்டுனரை பணியமர்த்த வேண்டும். அவர்கள் மீது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக தண்டனை பெற்றிருக்கக்கூடாது.
வாகனத்தில் தகுதி வாய்ந்த கூடுதல் நபர் இருத்தல் வேண்டும். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வாகனத்தில் செல்ல வேண்டும். 50 கி.மீ., வேகத்திற்கு மேல் வாகனங்கள் இயக்கப்படாமல் இருக்க 9.12.2010ம் தேதிக்குள் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி அவசியம். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக்கூடாது. அனுமதி மற்றும் தகுதி சான்று இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது சோதனையின்போது கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் காவல் நிலையத்தில் ஒப்படைத்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட கல்வி அலுவலர் பூபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||